FD Vs PPF in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதாவது இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு அல்லது முதலீடு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. ஆம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் உள்ள பணத்தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமில்லாமல் எதிர்காலத்திற்காகவும் சேமிப்பது அல்லது முதலீடு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களது எதிர்காலத்திற்க்காக முதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலர் எதில் முதலீடு செய்தால் நமக்கு பாதுகாப்பான பலனை அளிக்கும் என்பதை ஆராய்ச்சி செய்யமாலே முதலீடு செய்து நஷ்டத்தை அடைகிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு முதலீட்டு முறையை பற்றி விரிவாக அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று பிக்சட் டெபாசிட் Vs பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவற்றில் எதில் முதலீடு செய்வது நல்லது என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
RD Vs PPF இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது தெரியுமா
பிக்சட் டெபாசிட் Vs பொது வருங்கால வைப்பு நிதி (PPF) எது சிறந்தது..?
பிக்சட் டெபாசிட் என்பது வங்கிகள், தபால் நிலையங்கள் அல்லது NBFC-கள் நிலையான வைப்பு தொகையை தயாரிப்புகளாக அளிக்கின்றது. அதாவது இது தபால் நிலையங்கள் , வங்கிகள் அல்லது வங்கிகள் அல்லாத NBFC நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பான முதலீடு சேவைகளில் இதுவும் ஒன்று ஆகும்.
நிலையான வங்கி வைப்புத் தொகையானது வழக்கமான சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. பெயர் குறிப்பிடுவது போல, வைப்புத் தொகையும் வட்டி விகிதமும் வங்கி FD -யின் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிக்சட் டெபாசிட் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Fixed Deposit பற்றிய தகவல்கள்
Public Provident Fund அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது முதியோருக்கு வருமான பாதுகாப்பினை வழங்குவதற்காக வரி இல்லாத முதிர்ச்சி தொகையை உருவாக்ககூடிய மத்திய அரசால் நிறுவப்பட்ட நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.
இப்பொழுது இவை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை இங்கு விரிவாக காணலாம் வாங்க..
ஆர்.டி கணக்கு Vs சேமிப்பு கணக்கு இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது
அம்சங்கள் | நிலையான வைப்பு (FD) | பொது வருங்கால வைப்பு நிதி (PPF) |
குறைந்தபட்ச வைப்புத் தொகை | 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை | 500 ரூபாய் |
பதவிக்காலம் | 7 நாட்கள் – 10 ஆண்டுகள் (சில வங்கிகளில் 20 ஆண்டுகள்) | 15 ஆண்டுகள் (5 ஆண்டுகளில் நீட்டிக்கப்படலாம்) |
தொடங்க தகுதிவாய்ந்தவர்கள் | இந்திய குடிமக்கள், NRIகள் குடிமக்கள், HUFகள், அறக்கட்டளை, கார்ப்பரேஷன் நிறுவனங்கள் போன்றவை | இந்திய குடிமக்கள் மட்டும் |
வட்டி விகிதம் | வட்டிவிகிதம் 2.90% முதல் 9.05% வரை வழங்கப்படுகின்றது | தற்போது, PPF வட்டி விகிதம் 7.1% வழங்கப்படுகின்றது |
கடன் வசதி | கிடைக்கும் | 3வது நிதியாண்டுக்குப் பிறகுதான் கிடைக்கும் |
முன்கூட்டியே திரும்பப் பெறுதல் | குறிப்பிட்ட FD வகைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது | 5வது நிதியாண்டுக்குப் பிறகுதான் அனுமதிக்கப்படுகிறது |
வரி சலுகை | 1.5 லட்சம் u/s 80 C வரை மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படுகிறது | IT சட்டத்தின்படி 80 C பிரிவின் கீழ் வரக்கூடிய டெபாசிட்கள் மட்டுமே வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியுடையவர்கள். |
முதலீடு செய்வது என்பது மிகவும் சிறந்த ஒன்று ஆகும். ஆனால் எதில் முதலீடு செய்கின்றோம் என்பதில் தான் நமது முதலீடு முழுமை அடைகிறது. அதனால் அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் முதலீடு செய்யப்போகும் முதலீட்டு முறையை பற்றி சரியாக தெரிந்து கொண்ட பிறகு முதலீடு செய்யுங்கள்.
பிக்சட் டெபாசிட் Vs திரவ நிதி இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |