FD vs SIP
மனிதனாக பிறந்த அனைவருக்குமே சேமிப்பு என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், இக்காலத்தில் இருக்கும் பணத்தேவையை விட எதிர்காலத்தில் தான் பணத்தேவை அதிகமாக இருக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு பெரும்பாலான மக்கள் சேமிக்க தொடங்கி விட்டனர். ஆனால் இதில் சேமித்தால் நல்ல லாபம் கிடைக்கும்.? என்பது யாருக்கும் தெரியாது. அப்படி தெரிந்தால் கூட சிலருக்கு குழப்பாக இருக்கும். எனவே, அந்த வகையில் FD Vs SIP இவை இரண்டில் எது சேமிப்பதற்கு சிறந்தது என்பதை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
FD vs SIP Which is Better in Tamil:
பிக்சட் டெபாசிட் அல்லது FD என்பது, முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிலையான வட்டி விகிதத்ததுடன் மொத்த தொகையை பெறுவதற்கான திட்டமாகும். இது முடிதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான உத்திரவாத வருமானத்தை அளிக்கிறது.
எஸ்ஐபி அல்லது சிஸ்டமிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பது மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான ஒரு வகையான முதலீடு ஆகும். இதில் முதலீட்டாளர்கள் தங்கள் தேவைகளை பொறுத்து முதலீடு செய்து கொள்ளலாம்.
இப்போது, இவ்விரண்டில் சேமிப்பதற்கு எது சிறந்தது.? என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
தங்கத்தில் முதலீடு செய்ய போறீங்களா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!
Which is Best FD or SIP in Tamil:
சிறப்புகள் | SIP | FD |
முதலீடு வகை | தவணை முறையில் | மொத்த தொகையில் |
உத்திரவாதம் | உத்திரவாதம் இல்லை | உத்திரவாதம் உண்டு |
ஆபத்து | அதிகம் | குறைவு |
வட்டி விகிதங்கள் | அதிகம் | குறைவு |
முதலீட்டார்கள் | இது ஆக்கிரமிப்பு மற்றும் பழமைவாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. | இது கன்சர்வேடிவ் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். |
பதவி காலம் | குறுகிய மற்றும் நீண்ட கால பதவிக்காலம். | பொதுவாக நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. |
குறைந்தபட்ச முதலீடு | 500 ரூபாய் | 1000 ரூபாய் |
மேலே சொல்லப்பட்டுள்ளதுபோல், FD- யை ஒப்பிடும்போது SIP முதலீடு செய்வதற்கு சிறந்த விருப்பமாகும். ஏனென்றால், FD -யை விட SIP -யில் வட்டி விகிதம் அதிகம். அதுமட்டுமில்லாமல் வரி, வருமானம் போன்ற சிறப்புகளும் SIP -யில் உள்ளது. ஆனால் இதில் உத்திரவாதம் அளிக்கப்பட மாட்டாது. எனவே நீங்கள், பாதுகாப்பான உத்திரவாதத்தை பெற விரும்பினால் முதலீடு செய்வதற்கு FD சிறந்தது.
பிக்சட் டெபாசிட் Vs திரவ நிதி இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது தெரியுமா..?
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |