Future மற்றும் Options என்றால் என்ன..? | Future And Options Trading in Tamil

Advertisement

Future And Options Trading

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய காலகட்டத்தில் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். அனைவரும் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்காமல் அதை ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். இதனால் சில வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ஒரு பெரிய மதிப்பு கிடைக்கும். முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் மூலம் பல வகையான முதலீட்டு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் Future And Options என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

PPF என்றால் என்ன..? இதில் முதலீடு செய்யலாமா..?

Future And Options என்றால் என்ன..?  

Future And Options

 Future மற்றும் Options என்பது ஒரு பங்குச் சந்தையில் Stock Derivatives இல் இருக்கும் முக்கிய வகைகளாகும். Future மற்றும் Options என்பது Derivative Trading என்று அழைக்கப்படுகிறது. பங்குச் சந்தையில் Future மற்றும் Options என்பது பங்குகள், பங்குச் சந்தை குறியீடுகள், பொருட்கள், நிதிகள் போன்ற அடிப்படைச் சொத்திலிருந்து அவற்றின் விலையைப் பெறும் ஒப்பந்தங்களாகும். 

அதாவது ஒரு பங்குச் சொத்தை பிற்காலத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் வர்த்தகம் செய்வதற்காக இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் என்று சொல்லப்படுகிறது.

Future மற்றும் Options இல் தனிநபர்கள் தங்கள் முதலீட்டின் மூலம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலைகள் மூலம் எதிர்கால அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

ஆன்லைன் டிரேடிங் என்றால் என்ன?

 

Future And Options

நீங்கள் இதில் பல்வேறு பரிமாற்றங்களில் சுதந்திரமாக வர்த்தகம் செய்யலாம். உதாரணத்திற்கு நீங்கள் பங்குச் சந்தைகளில் பங்கு Future மற்றும் Options இல் வர்த்தகம் செய்யலாம். இதில் அடிப்படைச் சொத்தை நீங்கள் கையகப்படுத்தாமல் வர்த்தகம் செய்யலாம் என்பதைப் புரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

நீங்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டாவிட்டாலும், வைத்திருக்கும் தங்கத்தை Future மற்றும் Options போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விலை மாற்றங்களிலிருந்து லாபம் பெற உங்களுக்கு மிகவும் குறைவான மூலதனம் தேவைப்படும்.

ஒரு நிறுவனத்தின் பங்குகள் அல்லது Commodity Futures Contract முறையில் ஒருவர் வாங்கினால், அதை அந்தக் Contract முடியும் நாட்களுக்குள் செட்டில் செய்துவிட வேண்டும். மறுபுறம் Contract முடியும் நாட்களுக்குள் இந்தக் கான்டிராக்ட் -ஐ விற்பனை செய்தவர்கள் இதைக் கட்டாயம் வாங்கியாக வேண்டும்.

Mutual Funds vs Stocks இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்

 

இதையும் படியுங்கள் => Trading Account மற்றும் Demat Account வேறுபாடுகள் என்ன? 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement