கோல்டு ETF-என்றால் என்ன, அதில் முதலீடு செய்வதுஎப்படி .?

gold etf details in tamil

Gold ETF Details in Tamil

பணத்தை சம்பாதிப்பதை விட அவற்றை பயனுள்ள வகையில் சேமிப்பது ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் பொருளாதார நிலையை சமாளிக்க வேண்டுமென்றால் முதலீடு அவசியமானது. இப்போது நீங்கள் சேமிக்க கஷ்டமாக இருந்தாலும் அவை மொத்தமாக ஒரு தொகையாக கிடைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் கோல்டு ETF என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கோல்டு ETF என்றால் என்ன.?

கோல்டு ETF-ல் முதலீடு செய்வது ஆன்லைன் வழியாக வாங்கப்படும் தங்கமாகும். அதாவது மஞ்சள் உலோகத்தின் மதிப்பை கண்காணிக்கும் மற்றும் பிரதிபலிக்கும் மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும். கோல்டு ETF-யின் ஒரு யூனிட் ஒரு கிராம் கோல்டிற்கு சமமானது. இந்த யூனிட்கள் பங்குச் சந்தையில் வாங்கக்கூடிய மற்றும் விற்கக்கூடிய டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் ஆகும். நிதி பொருட்களால் ஆதரிக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் பிசிக்கல் படிவத்தில் கோல்டை சொந்தமாக்கவில்லை. எனவே நீங்கள் கோல்டு ETF-களை ரெடீம் செய்யும்போது, நீங்கள் கோல்டிற்கு சமமான பணத்தை பெறுவீர்கள் மற்றும் உலோகத்தை அல்ல.

கோல்டு ETF-ல் இன்வெஸ்ட்மென்ட் செய்வதகு எப்படி.?

பங்கு சந்தைகளில் சந்தை விலையின் படி கோல்டு ETF-காலை வாங்கலாம். இதில் ட்ரேடிங் செய்ய உங்களுக்கு டீமேட் கணக்கு தேவைப்படும். இதற்காக உள்ள புரோக்கர்களின் உதவியுடன் கோல்டு ETF-களை வாங்க முடியும்.

முதலில் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கை திறக்க வேண்டும்.

உங்களுடைய நிதியை தேர்வு செய்ய வேண்டும்.

புரோக்கர் போர்ட்டல் மூலம் குறிப்பிட்ட யூனிட்களுக்கான ஆர்டரை பிளேஸ் செய்யவும்.

பங்குச் சந்தையில் விற்பனை ஆர்டருடன் கொள்முதல் ஆர்டர் பொருந்தப்பட்டவுடன், இமெயிலுக்காக உங்கள் போனில் உறுதிப்படுத்தல் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும்.

Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா 

நீங்கள் ஒரு ஒட்டுமொத்த தொகையை வாங்கலாம் அல்லது சீரான இடைவெளிகளில் இன்வெஸ்ட் செய்யலாம்.

புரோக்கர்கள் பரிவர்த்தனைக்கு ஒரு பெயரளவு தொகையை வசூலிக்கின்றன.

இதில் முதலீடு செய்வதன் நன்மைகள்:

கோல்டு ETF-களில் முதலீடு செய்வது பாதுகாப்பான ஒன்றாக இருக்கிறது.

தங்க முதலீட்டு முறைகளுடன் ஒப்பிடும் போது இதில் செலவு குறைவு.

கோல்டு ETF-களில்ட்ரேடிங் நிகழ்நேர தங்க விலைகளின் அடிப்படையில் டிரேடிங் செய்யப்படுகின்றன. விலைகள் பற்றிய தகவல் பொதுவாக கிடைக்கிறது.

இதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாங்கலாம் மற்றும் விற்கலாம். அதிக பணவரவை வழங்குகிறது.

தங்க விலை ஏற்ற இறக்கங்களை லாபத்தை சம்பாதிக்க முடியும்.

FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு