வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தங்கத்தில் முதலீடு செய்ய போறீங்களா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

Updated On: June 13, 2023 12:08 PM
Follow Us:
gold investment plan in tamil
---Advertisement---
Advertisement

Gold Investment Plan 

பொதுவாக அனைவருக்கும் நீண்ட முதலீட்டை பெறுவதற்கு ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் சிலருக்கு தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் எவ்வாறு முதலீடு செய்வது என்றும், அதில் காணப்படும் சிறப்புகள் மற்றும் இதர விவரங்கள் தெரியாமல் இருக்கும் காரணத்தினால் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை கைவிட்டு விடுவார்கள். ஒருவேளை இனிவரும் காலங்களில் உங்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இன்றைய பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்று தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

தங்க முதலீடு என்றால் என்ன.? 

நாம் செய்யும் முதலீடு திட்டங்களில் தங்க முதலீடும் ஒன்று. அந்த வகையில் தங்கத்தில் முதலீடு என்பது தங்க துறையினை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் முறையே தங்க முதலீடு எனப்படும்.

பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா

Mutual Fund Gold Investment:

பொதுவாக பெரும்பாலான நபர்கள் பணத்தினை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து இருப்பார்கள். அத்தகைய முதலீட்டிலும் நிறைய பொருளாதார ஏற்றத்தினை பெற்று இருப்பார்கள்.

அதேபோல் மியூச்சுவல் ஃபண்டில் தங்கத்திற்கான முதலீடும் இருக்கிறது. அதாவது நம்முடைய பணத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ தங்கத்தில் முதலீடு செய்யும் முறை ஆகும்.

பணத்தினை முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது என்பது சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் தங்கதிற்கான முதலீடு என்பது அதிகமான சரிவினை ஏற்படுத்தாமல் எதிர்காலத்தில் நிலையான ஒரு தொகையினை பெற செய்கிறது.

இதில் ஒருவர் கிராம் கணக்கில் முதல் கிலோ கணக்கு வரை முதலீடு செய்யலாம். மேலும் நீண்ட கால முதலீட்டிற்கு பிறகு இதனை திரும்ப பெரும் போது தங்கத்தின் விலை ஆனது அதிகமாக இருந்தால் உங்களுக்கும் அதனை போலவே இருமடங்கு நிதிநிலை உண்டாகும்.

மேலும் முற்றிலும் சந்தா தாரனின் பாதுகாப்பினையும் குறிக்கிறது. இதனை சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மியூச்சுவல் ஃபண்ட்டை போலவே தங்கத்தில் முதலீடு செய்வது ஆகும்.

அதேபோல் பணவீக்கத்தின் போது தங்கத்தின் விலை என்பது பெரிதும் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

எதில் முதலீடு செய்வது என்று தெரியவில்லையா.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை