Gold Saving Investment Tamil
பெண்களுக்கு எவ்வளவு தான் நகை வைத்திருந்தாலும் நகை மீது உள்ள ஆசை மட்டும் போகாது. யாராவது புதிதாக நகை அணிந்திருந்தால் அந்த நகையை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்து விடும். இதற்காக பணத்தை சேமித்து கொண்டே இருப்பார்கள். இப்படி சேமித்து நகையை வாங்கிய காலம் இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் சேமித்து வைத்தெல்லாம் நகையை வாங்க முடியாது. ஏனென்றால் நகையின் விலையானது நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே இருக்கிறது. எப்படி விலை ஏறினாலும் நகை வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் எல்லாருக்கும் பயனுள்ள வகையில் இந்த பதிவில் நகை இரு மடங்காக டிப்ஸை பற்றி கூறியுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
Gold Demand:
பவுனு விலை ஆனது முன்னடியெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை தான் விலை ஏறியது. ஆனால் இப்போதெல்லாம் நாளுக்கு நாள் பவுனு விலை ஏறிக்கிட்டே இருக்கிறது. பவுனு விலை எப்படி ஏறினாலும் அதனை வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். அதிலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பவுனு போட்டு தான் திருமணம் செய்து வைப்பார்கள். தங்களின் மதிப்பையும், மரியாதையும் அதிகப்படுத்துவதற்கும் பவுனை வாங்குகிறர்கள்.
பவுன் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாகவே போகிறது. என்ன தான் தங்கம் வாங்கணுமுன்னு பணத்த சேத்து வச்சாலும் செலவாகிறது. அதுமட்டுமல்ல பவுனு விலையும்ம் நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே இருக்கு. இதனால சாமானிய மக்களுக்கு பவுன் வாங்குகிறது கனவாகவே போய்விடும். நகை வாங்க வேண்டும் என்ற கனவு நனைவாகுவதற்கு இந்த ஐடியாவை பின்பற்றுங்க.
நகை வாங்க Secret ஐடியா:
உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருக்கிறது என்றால் அதனை வங்கியில் அடகு வையுங்க. ஒரு பவுனு நகையை அடகு வைக்கும் போது தோராயமாக 40,000 ரூபாய் கொடுப்பார்கள். இந்த விலையானது ஊருக்கு ஊர் பொறுத்து மாறுபடும்.
இந்த பணத்தை வைத்து நகை கடைக்கு சென்று 1/2 பவுனு நகை எடுக்கலாம். அதுவே உங்களிடம் இரண்டு பவுன் இருக்கிறது என்றால் 1 பவுனு எடுக்கலாம்.
இன்னொரு முறை என்றால் உங்ககிட்ட 10,000, 20,000 இருக்கிறது என்றால் அதனை செலவு செய்யாமல், வீட்டில் ஏதவாது நகை இருந்தால் அதனை அடகு வைத்து இதிலிருந்து வரும் பணத்தையும், உங்ககிட்ட இருக்கிற பணத்தையும் சேர்த்து ஒரு பெரிய தொகை கிடைக்கும். எடுத்துக்காட்டாக உங்ககிட்ட 3 பவுனு நகை இருக்கிறதுன்னு வச்சுப்போம். கையில் ரூ. 20,000 பணம் இருக்கு. 3 பவுனு நகையை அடகு வச்சா தோராயமாக 1,20,000 கிடைக்கிறது என்று வைத்து கொள்வோம். இப்போ உங்ககிட்ட மொத்தமா 1,40,000 ரூபாய் இருக்கிறது. இன்னைக்கு பவுனு ரேட் 66,000 ரூபையாக இருக்கிறது. தோராயமாக 2 பவுனு எடுக்கலாம்.
இந்த முறை ஏன் சொல்றேன்னா நம்மகிட்ட மொத்த தொகையாக கையில் இருக்காது. எப்போதாவது தான் இருக்கும், அதனை செலவு செய்யாமல் இது போல நகையாக எடுத்திட வேண்டும். இதனை நீங்கள் அடகு வைத்து திருப்பி கொள்ளலாம்.
இந்த முறை லாபமா அல்லது நஷ்டமா:
நீங்கள் நகையை அடகு வைத்து நகை வாங்குவது நஷ்டம் இல்லை. லாபம் தான். நீங்க பணத்தை சேர்த்து வைத்து நகையை வாங்க போகிறீர்கள் என்றால் அதற்குள் நகையின் விலையானது அதிகரிச்சுடும். அதனால் உங்ககிட்ட நகை வீட்டில் சும்மா தான் இருக்கும். அதனை அடகு வைத்து நகையை வாங்குவது நிச்சயம் லாபம்.
வட்டி:
இந்த மாதிரி நீங்க அடகு வைத்தால் வட்டி அதிகமாக இருக்குமோ என்ற பயம் இருக்கும். நீங்க வங்கியில் அடங்கி வைப்பதன் மூலம் வட்டி குறைவாக தான் இருக்கும். நீங்க வட்டியை மட்டும் மாசம் மாசம் செலுத்தலாம். இல்லையென்றால் உங்ககிட்ட 2000 அல்லது 3000 பணம் இருக்கிறது என்றால் அதனை செலுத்தி அசல் தொகையிலிருந்து கழித்து கொள்ளலாம்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |