Gold vs Real Estate Investment in Tamil
முதலீடு என்பது நம்முடைய வறுமை காலத்தில் நமக்கு அது நல்ல முன்னேற்றமாக இருக்கும் என்பதற்காகத்தான் முதலீடு செய்கிறோம். ஆனால் நாம் தெளிவாக என்றுமே எந்த விஷயத்தில் இறங்க மாட்டோம் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் சில நேரத்தில் நாம் முதலீடு செய்த இடமும் எதில் முதலீட்டு செய்கிறோம் என்பதை பொறுத்து தான் சொல்கிறேன்.
தவறுதலாக அதில் நாம் ஏதாவது நட்டம் ஏற்பட்டு விட்டது என்றால் உடனே நான் செய்தது தவறு என்று சொல்லி நம்மை நமே திட்டுக்கொள்வதும் வழக்கம். சிலர் நிறைய இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின் மீது முதலீடு செய்வது வழக்கம் ஒன்று தங்கம் மற்றோன்று ரியல் எஸ்டேட் என்று முதலீடு செய்வோம். இன்னும் சிலர் பண்ட் என்ற அடிப்படையில் முதலீடு செய்வார்கள் அதில் நிறைய வகை உள்ளது. மேலும் அதிகமாக ஸ்டோக்ஸ் என்று தான் முதலீடு இப்போது செய்கின்றன இந்த இரண்டிற்கும் வேறுபாடுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Mutual Funds vs Stocks இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்
சரி வாங்க தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா அல்லது ரியல் எஸ்டேடில் முதலீடு செய்வது நல்லதா என்று பார்ப்போம்..!
Gold vs Real Estate Investment in Tamil:
முதலீடு:
தங்கம்:
தங்கத்தில் முதலீடு செய்ய உங்களின் தனிப்பட்ட விருப்பமே ஆகும். இதில் நீங்கள் எவ்வளவு வேண்டுமாலும் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு: உங்களிடம் 5,000 இருந்தாலும் முதலீடு செய்யலாம். ஆகவே முதலீட்டுக்கு சிறந்து தங்கத்தில் தான்.
ரியல் எஸ்டேட்:
ரியல் எஸ்டேடீல் அப்படி இல்லை நீங்கள் 1/2 கிரௌண்ட் வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு உங்களிடம் முழு தொகையும் தேவைப்படும். அதில் முன்பணமாக எதுவும் முடியாது.
எவ்வளவு காலம் லாபம்:
தங்கம்:
தங்கத்தை குறைந்த காலத்திற்கும் நீண்டகாலத்திற்கும் வைத்திருக்கலாம் மேலும் காலத்திற்கு ஏற்றது போல் ஏறவும் செய்யும் இறங்கவும் செய்யும். காலம் அதிகமாக அதிகமாக லாபம் அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட்:
நீங்கள் உங்களுடைய முதலீடை நீண்டகாலமாக வைத்திருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு ரியல் எஸ்டேடில் முதலீடு செய்வது நல்லது. பொருளாதாரத்திற்கு ஏற்றது போல் லாபம் அதிகரிக்கும்.
Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?
சம்பாதிப்பது:
தங்கம்:
தங்கமானது வருமானத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். அதாவது ஒரு 10 வருடத்திற்கு பின்பு நீங்கள் வாங்கிய விலைக்கு எடுத்து கொள்வது கடினம் மேலும் அன்றைய விலை நிலவர படி தான் லாபம் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்:
ரியல் எஸ்டேட் அப்படி இல்லை அதை வாடகைக்கு கொடுக்கலாம் அதனை மாதம் மாதம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளலாம். அதில் ஒரு பாதியை அடமானம் வைக்க கூடபயன் பயன்படுத்தலாம்.
பணமாக்குவது எது எளிது:
தங்கம்:
தங்கத்தில் முதலீடு செய்வதும் சரி அல்லது அதனை பணமாக்குவதும் சரி இரண்டுமே வேலைகள் அதிகம் கிடையாது மிகவும் எளிமையாகவே இருக்கும்..!
ரியல் எஸ்டேட்:
ரியல் எஸ்டேட் அப்படி இல்லை அதனை பணமாக்க நிறைய வேலைகள் உள்ளது. பத்திரத்தை வாங்குவது அதில் எழுத்துக்களால் எழுதுவது, மற்றும் அரசாங்க சார்ந்த வேலைகள் இருக்கும் இதற்கு குறைந்தது 5 நாட்கள் இருக்கும். மேலும் அதிகபட்சமாக 1 மாதம் கூட ஆகலாம் ஆகவே இரண்டிற்கும் என்ன வேறுபாடுகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்..! உங்களுக்கு எந்த முதலீடு சிறந்ததோ அதில் முதலீடு செய்யுங்கள்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |