மாதம் வட்டி மட்டுமே 6000 ரூபாய் தரும் முதலீட்டு திட்டம்..! HDFC Bank Fixed Deposit Interest Rates..!
நண்பர்களுக்கு வணக்கம்.. இந்தியாவில் பொதுவாக பல வங்கிகளில் முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் HDFC வங்கி வழங்கும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு வழங்கும் வட்டி விகிதம் எவ்வளவு. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க. HDFC பேங்க் அக்கௌன்ட் வச்சிருக்கவுங்க ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமத்தை பெறமுடியும். குறிப்பாக மாதம் வட்டிமட்டுமே 6000 ரூபாய் வரை பெறமுடியும். சரி வாங்க இந்த டெப்பாசிட் திட்டம் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பிக்சட் டெபாசிட் – HDFC Bank Fixed Deposit Interest Rates:
பொதுவாக பிக்சட் டெபாசிட் என்றாலே ஒரு பெரிய தொகையை ஒரு முறை மட்டும் முதலீட்டு செய்து அதனுடைய மெச்சுரிட்டி காலம் முடியும் வரை மாதம் மாதம் அதறகான வட்டியை பெற்று வரலாம்.
ஆக இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட்டில் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.
பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைவிட, மூத்த குடிமக்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே வட்டி வழங்கப்படுகிறது.
நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வட்டி தொகையானது மாதம் மாதம், அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம், அல்லது வருடத்திற்கு ஒரு முறை பெறலாம், அல்லது உங்களுடைய மெச்சுரிட்டி காலம் முடிவடைந்த பிறகு வட்டியும் முதலுமாக சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.
HDFC ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட்டின் மெச்சுருட்டி காலம் என்பது தற்பொழுது இரண்டு வகையாக வழங்கப்படுகிறது அவை முதல் வகை 35 மாதங்கள் ஆகும். இரண்டாவது வகை 55 மாதங்கள் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் 3,000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 8.2% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு..?
அதற்கான வட்டி விகிதம்:
டெபாசிட் காலம் | பொது குடிமக்களுக்கு | மூத்த குடிமக்களுக்கு |
35 மாதம் | 7.15% | 7.65% |
55 மாதம் | 7.20% | 7.70% |
35 மாதங்களில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
10,000 ரூபாய் முதலீட்டிற்கு:
பொது குடிமக்கள் 35 மாதங்களுக்கு 10 ஆயிரம் முதலீடு செய்திருந்தால் மாதம் மாதம் 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வட்டி கிடைக்கும். 35 மாதங்களுக்கு மொத்தமாக 2100 வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 10 ஆயிரம் முதலீட்டிற்கு மாதம் மாதம் 60 ரூபாய் முதல் 65 ரூபாய் வட்டி கிடைக்கும். மொத்தமாக 2200 ரூபாய் வட்டி கிடைக்கும்.
25,000 ரூபாய் முதலீட்டிற்கு:
பொது குடிமக்கள் 35 மாதங்களுக்கு 25 ஆயிரம் முதலீடு செய்திருந்தால் மாதம் மாதம் 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வட்டி கிடைக்கும். 35 மாதங்களுக்கு மொத்தமாக 5190 வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 25 ஆயிரம் முதலீட்டிற்கு மாதம் மாதம் 150 ரூபாய் முதல் 160 ரூபாய் வட்டி கிடைக்கும். மொத்தமாக 5540 ரூபாய் வட்டி கிடைக்கும்.
50,000 முதலீட்டிற்கு:
பொது குடிமக்கள் 35 மாதங்களுக்கு 50 ஆயிரம் முதலீடு செய்திருந்தால் மாதம் மாதம் 290 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வட்டி கிடைக்கும். 35 மாதங்களுக்கு மொத்தமாக 10,371 வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 50 ஆயிரம் முதலீட்டிற்கு மாதம் மாதம் 310 ரூபாய் முதல் 320 ரூபாய் வட்டி கிடைக்கும். மொத்தமாக 11,000 ரூபாய் வட்டி கிடைக்கும்.
1 லட்சம் முதலீடு செய்தால்:
பொது குடிமக்கள் 35 மாதங்களுக்கு 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் மாதம் மாதம் 580 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை வட்டி கிடைக்கும். 35 மாதங்களுக்கு மொத்தமாக 20,743 வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 1 லட்சம் முதலீட்டிற்கு மாதம் மாதம் 620 ரூபாய் முதல் 640 ரூபாய் வட்டி கிடைக்கும். மொத்தமாக 22,173 ரூபாய் வட்டி கிடைக்கும்.
3 லட்சம் முதலீடு செய்தால்:
பொது குடிமக்கள் 35 மாதங்களுக்கு 3 லட்சம் முதலீடு செய்திருந்தால் மாதம் மாதம் 1700 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை வட்டி கிடைக்கும். 35 மாதங்களுக்கு மொத்தமாக 62,242 வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 3 லட்சம் முதலீட்டிற்கு மாதம் மாதம் 1800 ரூபாய் முதல் 1950 ரூபாய் வட்டி கிடைக்கும். மொத்தமாக 66,520 ரூபாய் வட்டி கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒருவரிடமிருந்து விடைபெறும் போது ஏன் டாட்டா சொல்கிறோம்..
5 லட்சம் முதலீடு செய்தால்:
பொது குடிமக்கள் 35 மாதங்களுக்கு 5 லட்சம் முதலீடு செய்திருந்தால் மாதம் மாதம் 2800 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை வட்டி கிடைக்கும். 35 மாதங்களுக்கு மொத்தமாக 1,03,724 வட்டி குடிக்கும்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 5 லட்சம் முதலீட்டிற்கு மாதம் மாதம் 3000 ரூபாய் முதல் 3200 ரூபாய் வட்டி கிடைக்கும். மொத்தமாக 1,10,873 ரூபாய் வட்டி கிடைக்கும்.
10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்:
பொது குடிமக்கள் 35 மாதங்களுக்கு 10 லட்சம் முதலீடு செய்திருந்தால் மாதம் மாதம் 5700 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை வட்டி கிடைக்கும். 35 மாதங்களுக்கு மொத்தமாக 2,07,462 வட்டி குடிக்கும்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 5 லட்சம் முதலீட்டிற்கு மாதம் மாதம் 6000 ரூபாய் முதல் 6450 ரூபாய் வட்டி கிடைக்கும். மொத்தமாக 2,21,760 ரூபாய் வட்டி கிடைக்கும்.
மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |