ரூ.10,000 முதலீட்டில் 3 கோடி அடைவது எப்படி?

Advertisement

What is Step Up SIP in Tamil

High Return Investment Tamil – பொதுவாக பலருக்கு SIP பற்றி தெரிந்திருக்கும். SIP என்பது வேறு ஒன்றும் இல்லை மாதம் மாதம் நம்மால் முடித்த சிறிய தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து வருவதாகும். இந்த SIP-யிலேயே இன்னொரு வழி இருக்கிறது அதுதான் Step Up SIP ஆகும். இந்த Step Up SIP முறையில் நாம் முதலீடு செய்தோம் என்றால் நமது முதலீட்டை பலமடங்கு அதிகரிக்க முடியும். ஆக அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க முதல் இந்த Step Up SIP என்றால் என்ன என்பதை பற்றி அறியலாம். அதன் பின்பு இந்த Step Up SIP முதலீடு செய்யும் முறை மற்றும் Step Up SIP முறையில் முதலீடு செய்வதால் என்ன நன்மை என்று தெரிந்துகொள்வோம்.

High Return Investment TamilStep Up SIP

Step Up SIP:

உங்களால் மாதம் மாதம் ஒரு 10,000 ரூபாய் முதலீடு செய்ய முடியும் என்று வைத்துக்கொள்வோம்.

இந்த முதலீட்டை நீங்கள் 2022-ஆம் ஆண்டில் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுவே 2023-ஆம் ஆண்டில் அதே 10,000 ரூபாயை முதலீடு செய்யாமல், 1000 ரூபாய் கூடுதலாக சேர்த்து 11 ஆயிரமாக முதலீடு செய்ய முயற்சி செய்கிறோம். இது போன்று ஒவ்வொரு வருடமும் முன்னதைவிட கூடுதலாக முதலீடு செய்ய ட்ரை செய்கிறோம். இது போன்று நாம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தோம் என்றால் 24 லட்சம் நாம் முதலீடு செய்திருப்போம். இந்த 24 லட்சத்திற்கு எவ்வளவு வட்டி கிடைக்க வேண்டுமோ அவ்வளவு வட்டி உங்களுக்கு கிடைக்கும்.

அதுவே நாம் ஒவ்வொரு வருடமும் 10, 10 சதவீதம் இன்கிரிஸ் செய்தோம் என்றால் 20 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுடைய மெச்சூரிட்டி அமௌன்ட் கிட்டத்தட்ட 68,73,000/- இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பேங்க் மூலம் SIP-யில் முதலீடு செய்யலாமா? செய்யக்கூடாத?

உதாரணம்:

Large Cap. Mid Cap, Small Cap, Hybrid Fund முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கான ரிட்டன்ஸ் 20 ஆண்டிரிக்கு பிறகு எவ்வளவு இருக்கும் என்று பார்க்கலாம்.

முதலீடு தொகை  வகை வட்டி  மெச்சூரிட்டி அமௌன்ட்
10,000/- Step Up SIP Per Annum 10% 2.99 கோடி
Large Cap 13% 2.08 கோடி
Mid Cap 17.8% 3.57 கோடி
Small Cap 18.7% 3.99 கோடி
Hybrid Fund 12.8% 2.03 கோடி

 

இவற்றில் தனி தனியாக முதலீடு செய்ய விருப்பதவர்கள் உங்கள் முதலீட்டு தொகையில் Step Up SIP 10 10 சதவீதம் பிரித்து Large Cap. Mid Cap, Small Cap, Hybrid Fund இவற்றில் முதலீடு செய்யலாம். இப்படி முதலீடு செய்தால் உங்களுக்கு மெச்சூரிட்டி அமௌன்ட் 2.99 கோடி கிடைக்கும். இதுவே 2.99 கோடி Step Up SIP முறையில் முதலீடு ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Lump Sum என்றால் என்ன..? இதில் எப்படி முதலீடு செய்வது..!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement