பணம் சேமிப்பு குறிப்புகள் – How to Save Money From Salary in Tamil
How to Save Money From Salary in Tamil – வணக்கம் நண்பர்களே.. அனைவரது வாழ்க்கையிலும் சேமிப்பு என்பது அவர்களது எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். வேகமாக முன்னேறி வரும் இன்றைய உலகில், சேமிப்பு என்பது பலருக்கு கடினமான ஒன்றாக இருக்கிறது. வருடம் வருடம் நம் வருமானம் இல்லை என்று பலர் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். ஆகவே நாம் ஒவ்வொரு மாதமும் உங்கள் செலவுகளை கண்காணிப்பதுதான் சேமிப்புக்கான முதல் படி. செலவுகளை கண்கணிக்கும்போது தேவையில்லாத செலவுகள், வீண் செலவுகளை சரியாக கணிக்க முடியும். இதன் மூலம், வீண் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க முடியும். சரி வாங்க சேமிப்பை அதிகரிக்க நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
How to Save Money From Salary in Tamil
டிப்ஸ்: 1
ஆண்டுதோறும் நமது வருமானத்தில் 30 சதவீதம் கட்டாயம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எழவேண்டும். பின் அவரை நாம் வழக்கமாக கடைபிடித்தோம் என்றால் நிச்சயமாக நமது சேமிப்பை அதிகரிக்க முடியும்.
டிப்ஸ்: 2
உங்களது சம்பளத்தை மூன்று விதமாக பிரிக்க வேண்டும் அதாவது வீடு மற்றும் உணவு,செலவு, வாழ்க்கை முறைக்கு 50%, சேமிப்பிற்கு 30% மற்றும் தங்கள் கடன்களுக்கு 20% என்று உங்கள் சம்பளத்தை பிரித்து செலவு செய்யுங்கள். உங்கள் சேமிப்பிற்கு பிறகு உங்கள் சம்பளத்தை செலவு செய்யுங்கள். செலவுக்கு பிறகு சேமிக்க வேண்டும் என்று எப்பொழுதுமே நினைக்காதீர்கள்.
டிப்ஸ்: 3
நீங்கள் சேமிக்கும் பணத்தை வெறுமென அப்படியே பேங்கில் போட்டுவிடாதீர்கள், பணத்தை அதிகரிக்க நிறைய முதலீட்டு திட்டங்கள் உள்ளன அவற்றில் முதலீடு செய்யுங்கள், அல்லது நீங்கள் சேமித்த பணத்தில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். தங்கத்தின் மீது செய்யும் முதலீடு எப்பொழுதுமே வீணாகாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்→ பணத்தை சேமிக்க சிறந்த வழிகள் |
டிப்ஸ்: 4
உங்களது வருமானம் அதிகரிக்கும்போது செலவுகளையும் அதிகரித்துவிட கூடாது. ஏன் சொல்றன் அப்படின்னா வருமானம் என்பது நமது வாழ்வில் கடைசிவரை நிரந்தரமாக இருக்கும் என்பதை நாம் சொல்லிவிட முடியாது. ஆகவே வருமானம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்பு தொகையின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.
டிப்ஸ்: 5
தேவையுள்ள செலவுகளுக்கு மட்டுமே நமது வருமானத்தை செலவு செய்ய வேண்டுமே தவிர, ஆடம்பர செலவுகளுக்காக நமது வருமானத்தை செலவு செய்ய கூடாது. அப்படி நாம் வீண்செலவுகளை செய்வதினால் தான் நம்மால் சேமிக்க முடிவதில்லை. ஆக நம்முடைய செலவுகளுக்கு விலைவாசி மற்றும் பணவீக்கம் காரணமாக இருந்தாலும் நம் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு நமது வருமானம் வளர்ச்சிக்கு ஏற்ப சேமிப்பை அதிகரிக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → உங்கள் சேமிப்பை அதிகரிக்க சிறந்த 5 வழிகள் இதோ..! |
மேலும் இது போன்ற முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |