Hybrid Fund Investment in Tamil
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… இன்றைய பதிவில் ஹைபிரிட் ஃபண்ட் என்றால் என்ன..? ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள போகிறோம். நாம் பெற்ற வருமானத்தை சேமிப்பதை விட அந்த வருமானத்தை முதலீடு செய்தால் என்ன கிடைக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். அதே போல மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் ஹைபிரிட் ஃபண்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பணத்தை சேமிப்பது நல்லதா..? முதலீடு செய்வது நல்லதா..? |
ஹைபிரிட் ஃபண்ட் என்றால் என்ன..?
Hybrid Fund என்பது தமிழில் கலப்பின நிதி என்று அழைக்கப்படுகிறது. Hybrid Fund என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து வகைகளில் வகைப்படுத்தப்படும் ஒரு முதலீட்டு நிதி ஆகும்.
இந்த Hybrid Fund சொத்து ஒதுக்கீட்டு நிதி என்று அழைக்கப்படுகிறது. ஹைப்ரிட் ஃபண்ட் என்பது ஒரு பரஸ்பர நிதி அல்லது கலப்பின நிதி என்றும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் சொத்துக்கள் அல்லது சொத்து வகைகளில் முதலீடு செய்யலாம். இந்த கலப்பின நிதியில் பங்குகள் மற்றும் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்ய முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு பல வகைகள் உள்ளன. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் வகைகளில் Hybrid Fund முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த Hybrid Fund முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஈக்விட்டி ஃபண்ட் , டெப்ட் ஃபண்ட் , கோல்ட் ஃபண்ட் , லிக்விட் ஃபண்ட் போன்ற திட்டங்களை Hybrid Fund திட்டங்கள் என்று கூறுகிறார்கள். அதனால் இந்த ஹைபிரிட் ஃபண்டில் ஏதேனும் 2 திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்ய முடியும்.
ஹைபிரிட் ஃபண்ட் முதலீட்டின் நன்மைகள்:
- இந்த ஹைபிரிட் ஃபண்டில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வகைகளில் முதலீடு செய்ய முடியும்.
- ஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்ட் ஆகிய ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் முதலீட்டாளர்களுக்கு இந்த ஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்டின் மூலம் நன்மைகள் கிடைக்கிறது.
- ஹைபிரிட் ஃபண்ட் மூலம் ஈக்விட்டி ஃபண்டில் அதிகமாகவும் டெப்ட் ஃபண்டில் குறைவாகவும் முதலீடு செய்ய முடியும்.
- அதேபோல டெப்ட் ஃபண்டில் அதிகமாகவும் ஈக்விட்டி ஃபண்டில் குறைவாகவும் முதலீடு செய்யலாம்.
- இதனால் முதலீட்டாளர்களுக்கு 2 வகையான லாபம் கிடைக்கும்.
- இந்த ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்வதால் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
மேலும், ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும்.
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இதுபோன்ற தவறுகளை செய்கிறீர்களா..? |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |