SIP-ல மாதம் 5000 Invest பண்ணி, 2 கோடி Return கிடைக்குமா?

Advertisement

Sip Investment in Index Fund Details in Tamil

Index Fund Details in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். ஆனால் அந்த சேமிப்பிற்கு யாரும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நமக்கு ஏதாவது அதிக பணம் கஷ்டம் வரும்போது தான் அதனை சிந்திப்போம். அதாவது ஏற்கனவே ஏதாவது ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் இப்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்குமே என்று நினைப்போம். இனியாவது அந்த தவறை செய்ய கூடாது ஏதாவது ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று உங்கள் மனதில் எண்ணம் இருந்தால், இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் SIP-யில் மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்தோம் என்றால், 2 கோடி வரை வருமானம் பெற முடியும். அது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

SIP என்றால் என்ன.?

இந்த SIP என்பது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் கிடையாது. இவற்றில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த SIP-யில் நிறைய Instruments இருக்கிறது. அதாவது Mutual Funds, Stocks, Index Funds, Pension Funds, Post Office (RD) என்று நிறைய Instruments இருக்கிறது. இந்த Instruments-யில் எது 13% முதல் 14% வரை வருமானம் தரும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

SIP Index Fund Details in Tamil:Index Funds

இந்த Index Funds-யில் மிக முக்கியமான ஒன்று Nifty Bees ஆகும். இந்த Nifty Bees-ஐ  பற்றி அறிவதற்கு முன் Nifty 50 பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

Nifty 50 என்பது இந்தியாவில் இருக்கும் டாப் 50 நிறுவனங்கள் தான் Nifty 50-யில் உள்ளது.

அந்த 50 நிறுவனங்களின் ஒவ்வொரு நிறுவனங்களுக்கு சென்று முதலீடு செய்வதற்கு பதில் மொத்தமாக அந்த 50 நிறுவனத்தையும் Index-ஆக வாங்கி முதலீடு செய்தீர்கள் என்றால், ஒரு நிறுவனத்தில் ஏற்றம் இறக்கம்  இருந்தாலும், மொத்தமாக அந்த 50 நிறுவனத்தில் 40 அல்லது 45 அல்லது 35 நிறுவனத்தில் ஏற்றம் இருந்தால். அந்த Nifty 50 ஏற்றத்தை பார்க்க ஆரம்பிக்கும்.

அதனை தான் Nifty Bees என்பார்கள் இந்த Nifty Bees-யில் Exchange Trade Fund (ETF)-யும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு Value இருக்கும். நீங்கள் எப்படி ஒரு Stocks வாங்குகிறீர்களோ அதேபோல் இந்த ETF-யும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இது அனைத்தும் மொத்தமாக உயரும் போதும், இவற்றில் இருந்தும் உங்களது லாபத்தை பார்க்க முடியும்.

உதாரணத்திற்கு: இந்த Nifty Bees-யின் விலை 2010-யில் எவ்வளவு என்றால் 40 ரூபாய் ஆகும். அதுவே 2020-யில் இதனுடைய விலை எவ்வளவு என்றால் 203 ரூபாய்க்கு டிரேடிங் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட 5 மடங்கு உயர்ந்துள்ளது.

ஆக நாம் இந்த சிஸ்டமேட்டிக் Nifty Bees-யில் முதலீடு செய்து வந்திருந்தோம் என்றால் நமக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?

Nifty Bees Returns:

உங்களுடைய முதலீட்டு தொகை 5,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் SIP-யில் மாதம், மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதை விட, ETF Method மூலம் எப்படி முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று பார்ப்போம்.

நாம் எப்படி இந்த ETF Method-யில் முதலீடு செய்யலாம் என்றால் 5% Strategy, Dips on Buying முறையில் முதலீடு செய்யலாம். இது ஏன் என்றால் ஒவ்வொரு முறையும் Nifty Bees 5% இறங்கும் போதேல்லாம் 5,000 ரூபாயை முதலீடு செய்யலாம். அதேபோல் Nifty Bees 5% ஏறும் போதும் 5,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும்.

அதாவது strategical-ஆக Nifty Bees 5%+யில் இருக்கும் போதும் முதலீடு செய்ய வேண்டும். அதுபோல் Nifty Bees 5%-யில் இருக்கும் போதும் முதலீடு செய்ய போகிறோம். இவ்வாறு முதலீடு செய்வதால் என்ன ஆகும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக மாதம் மாதம் இல்லாமல் உங்களுக்கு எப்போது எல்லாம் Nifty Bees-யில் 5% ஏற்றம் இறக்கம் இருக்கிறதோ எப்போது எல்லாம் முதலீடு செய்து வந்திருந்தால் உங்களது 10 வருடத்திற்கான மொத்த முதலீடு 6,15,000/-இருக்கும். ஆனால் உங்களுக்கு கிடைக்கும் Returns எவ்வளவு இருக்கும் என்றால் 13,68,711/- ரூபாய் ஆகும். ஆக உங்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்.

அதுவே நீங்கள் 30 வருடம் Nifty Bees-யில் 5,000 ரூபாய் முதலீடு செய்து வந்திருந்தால். உங்களுடைய முதலீட்டு தொகை 18,00,000/- ஆகும். அதற்கு கிடைக்கும் Returns 3,26,78,947/- ரூபாய் உங்களுக்கு லாபமாக கிடைக்கும்.

இது போன்ற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக ஒரு தொகையை சேமித்து வைத்திருப்பீர்கள். அந்த தொகை உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
Mutual Funds vs Stocks இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement