Index Funds Vs Mutual Funds
நாம் எப்போதும் புதிதாக ஒரு செயலை செய்வதற்கு முன்பாக அந்த செயலை பற்றி நன்றாக ஆராய்ந்து அதில் இருக்கும் நன்மை மற்றும் தீமையினை பற்றி தெரிந்துக்கொண்டு தான் செய்வோம். இப்படி இருக்கும் போது பண விஷயத்தில் நாம் எது சிறந்தது என்று யோசிப்பது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில் இன்று பலரும் சம்பாதிக்கும் பணத்தை நிதி நிறுவனம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகிறோம். அப்படி நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களில் இரண்டான Index Funds Vs Mutual Fund இதில் எது சிறந்தது என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
குறியீட்டு நிதி Vs மியூச்சுவல் பண்ட் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு:
நாம் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு அந்த நிறுவனத்தை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் முதலீடு செய்யும் பங்கு சந்தையின் மேலாளரை பொறுத்தே முதலீடு செய்யும் தொகை மற்றும் இதர விவரங்கள் மாறுபடும். ஆனால் குறியீட்டு நிதியில் நிஃப்டி 50 என்ற செயல்திறன் கொடுக்கப்படுகிறது. அதனால் அதனை சரியாக சோதனை செய்து மேலாளர் உங்களுக்கு உதவுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பு மியூச்சுவல் பண்டில் கிடையாது.
அதுபோல நாம் முதலீடு செய்யும் எந்த பங்கு சந்தையாக இருந்தாலும் அதில் சில குறிப்பிட்ட நிதிகள் மற்றும் வருடாந்திர கட்டணங்கள் இருக்கும். இதனை நாம் ஒப்பிடும் போது குறியீட்டு நிதியில் குறைவாக இருக்கிறது.
பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது சிறந்தது.? |
பங்கு சந்தை என்றால் ஏற்றம் இறக்கம் இருப்பது மிகவும் சாத்தியமான செயலாக இருக்கிறது. ஆனால் குறியீட்டு நிதியில் நிஃப்டி 50 என்ற செயல்திறன் அடிப்படையில் முதலீடு செய்வதன் காரணமாக இதில் மியூச்சுவல் பண்டை விட அதிகமான இறக்கங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுபோல நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பாக பங்கு சந்தை அல்லது நிதிநிறுவனம் இரண்டிலும் உள்ள கடந்த ஆண்டு வருமானம், நிதி மேலாளரின் வருமானம் மற்றும் AUM போன்றவற்றை கண்காணிப்பது நல்லது. ஆனால் மியூச்சுவல் பண்ட் முதன்மை இடத்தில் உள்ள ஒரு பங்கு சந்தையாகவும் மற்றும் பாதுகாப்பு மிகுந்தையாகவும் கருதப்படுகிறது.
Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |