Indian Bank Rd 1500 Per Month in Tamil
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடம் பண இருந்தாலே மற்ற எல்லாமே தானாக வந்துவிடும் என்ற நிலை இருக்கிறது. அதனால் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் எதில் சேமிப்பது என்ற குழப்பம் உள்ளது. நமது பதிவில் தினந்தோறும் முதலீடு பற்றிய திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை அறிந்து கொள்ளவோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:
தகுதி:
18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
டெபாசிட் காலம்:
இந்தியன் வங்கியில் Rd திட்டத்தில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை கால அளவு வழங்கப்படுகிறது.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
வட்டி:
இந்த திட்டடத்தில் வட்டியானது 4% முதல் 5.75% வரை வழங்கப்படுகிறது.மேலும் இந்த வட்டி விகிதமானது கால அளவை பொறுத்து மாறுபடும்.
கால அளவு | பொதுமக்களுக்கான வட்டி | மூத்த குடிமக்களுக்கான வட்டி |
180 நாட்கள் | 4.00% | 4.50% |
181 நாட்கள் – 269 நாட்கள் | 4.00% | 4.50% |
9 மாதங்கள் – 364 நாட்கள் | 4.40% | 4.90% |
1 ஆண்டு | 5.00% | 5.50% |
1 வருடம் 1 நாள் – 1 வருடம் 364 நாட்கள் | 4.95% | 5.45% |
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.10% | 5.60% |
3 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் | 5.25% | 5.75% |
ரெக்கரிங் டெபாசிட் திடட்டத்தில் எவ்வளவு கிடைக்கும்:
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | Normal Citizens | Senior citizens | ||||
மொத்தமாக சேமித்த தொகை | வட்டி தொகை (5.25%) | மொத்த தொகை | மொத்தமாக சேமித்த தொகை | வட்டி தொகை (5.25%) | மொத்த தொகை | ||
1500 ரூபாய் | 10 வருடம் | 1,80,000 ரூபாய் | 56,800 ரூபாய் | 2,36,800 ரூபாய் | 1,80,000 ரூபாய் | 63,313 ரூபாய் | 2,43,313 ரூபாய் |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |