கடன் பத்திரம்
இன்றைய காலத்தை பொறுத்த வரை நாம் நிறைய வகையான முதலீடு பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகின்றோம். அப்படி நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்த பங்குசந்தை பற்றியும் அதில் உள்ள விதிமுறைகள் பற்றியும் தெளிவாக அறிந்து இருக்க வேண்டும். ஏனென்றால் முதலீடு என்று பார்த்தால் அதில் ஏற்றம் மற்றும் இரக்கம் இரண்டும் கலந்து தான் காணப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கும் விதிமுறைகளை தெரிந்துக்கொள்வது தான் நமக்கு நல்லது. அந்த வகையில் இன்று நாம் கடன் பத்திரம் மூலம் முதலீடு செய்து பணம் பெறுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு நாமும் நான்கு பேருக்கு தெரிவிக்கலாம் வாங்க..!
Hybrid Fund -ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?
கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு நாம் கவனிக்க வேண்டியவை:
நாம் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் உங்களுடைய பத்திரத்தை முதலீடு செய்து அதன் மூலம் கூடுதல் அளவிலான வட்டியில் கூட குறிப்பிட்ட கால அளவிலான தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.
இது மாதிரி நீங்கள் கடன் பத்திரம் மூலம் பண பெறுவதற்கு முன்பு முக்கியமாக சில விஷயங்களை கவனித்த பிறகு தான் அதில் கையெழுத்து போட வேண்டும்.
வட்டிக்கான தொகை:
நீங்கள் கடன் பத்திரத்தை முதலீடு செய்து பணம் பெற போகிறீர்கள் என்றால் உங்களுக்கு முன்பாக அந்த நிறுவனத்தில் வட்டி விகிதத்தினை கூறியிருப்பார்கள்.
அப்படி இருந்தாலும் கூட நீங்கள் கையெழுத்து போடும் பத்திரத்தில் வட்டி விகிதம் மற்றும் அதனுடைய தொகை குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இதுமாதிரி குறிப்பிடவில்லை என்றால் நீங்கள் அதனை ஒரு கேள்வியாக எழுப்பி கேட்க வேண்டும்.
முதலீடு காலம்:
கடன் பத்திரம் மூலம் நீங்கள் முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் அப்போதே நீங்கள் முதலீட்டிற்கான காலம் எத்தனை ஆண்டுகள் என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் உங்களுக்கு வட்டி விகிதம் பற்றிய முழு தகவலும் கிடைக்கும்.
பத்திரத்திற்கான மதிப்பீடு:
ஒவ்வொரு பத்திரமும் ஒவ்வொரு வகையிலான மதிப்பீட்டுடன் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வெளியிடும் கடன் பத்திரத்திற்கான முதலீட்டில் எந்த மாதிரியான மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த மதிப்பீட்டில் உள்ள வசதி இரண்டினையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
பத்திரத்தில் உள்ள ஆபத்து:
முதலீடு செய்யப்படும் நிறுவனங்களில் சில விதிமுறைகள் இருக்கும். அது என்னவென்றால் கடன் பத்திரத்தை கொண்டு நீங்கள் முதலீடு செய்த பிறகு நிறுவனம் திவால் ஆனாலும் கூட முதலீட்டாளர்க்கான தொகை குறிப்பிட்ட அளவில் வழங்கப்படும். இந்த விஷயத்தை நீங்கள் கட்டாயமாக கவனிக்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் இல்லாமல் மற்ற விஷயங்கள் இருந்தாலும் கூட அதனை கடன் பத்திரம் மூலம் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியது அவசியமான ஒன்று.
Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |