Permanent Income After Retirement
ஒருவரின் தனிப்பட்ட நிதி மேலாண்மையில், அதிகம் அக்கறை செலுத்தவேண்டியது, ஓய்வு கால வாழ்கை முறை பற்றி தான். நீங்கள் ஓய்வு பெற்றவுடன், உங்களுக்கு நிலையான வருமான ஆதாரம் இருக்காது. மேலும், உங்கள் வங்கியில் உள்ள சேமிப்புகள் உங்கள் செலவுகளை ஈடு செய்யாது, ஏனெனில் பணவீக்கம் அவற்றைச் சாப்பிட்டு விடும், உங்கள் விருப்பப்பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் சக்தியையும் குறைக்கும்.
நீங்கள் ஓய்வு பெறும் வயதில் உங்கள் செலவுகளை ஈடுகட்ட உங்களுக்கு பணம் தேவைப்படும் என்பதாலும், பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு நமது வாழ்க்கைத்தரம் குறையாமல் இருக்கவும், பணியின் போது இருந்த வாழ்க்கைத்தரம் நிலையாக இருக்கவும், நமக்கு நிலையான வருமானம், பணி ஓய்விற்கு பிறகும் தேவைப்படுகிறது. அப்படி ஒரு நிலையான வருமானம் வரக்கூடிய திட்டத்தை நாம் நமது பணிக்காலத்திலேயே திட்டமிட தொடங்க வேண்டும்.
மாதம் 10,000 ரூபாய் வரை ஓய்வூதியம் அளிக்கும் அருமையான திட்டம்..!
அப்போது தான் ஓய்வு பெற்ற பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது, பிடித்தயிடங்களுக்கு பயணம் செய்வது அல்லது நகரத்திலிருந்து வெகுதூரம் சென்று அமைதியான வாழ்க்கையை வாழ்வது போன்ற நமது ஆசைகளை அடைய முடியும். இல்லையென்றால் நாம் வயதான காலத்திலும் உழைக்க வேண்டிய சூழல் ஏற்ப்படகூடிய அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட அபாயத்தில் இருந்து தப்பிக்க ஒய்வு காலத்தில் நிலையான வருமானம் வரக்கூடிய திட்டங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். மேலும் இது போன்ற பயனுள்ள தகவலுக்கு பொதுநலம்.காம் தளத்தை தொடருங்கள்.
ஒய்வு காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க இவற்றில் முதலீடு செய்யுங்கள்:
மருத்துவ காப்பீடு
தனிப்பட்டஒருவரின் நிதி மேலாண்மையில் மருத்துவ காப்பீடு மிக முக்கியம் என்று பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ காப்பீடு மூலம் நமக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பொருளாதார ரீதியாக தற்காத்துக்கொள்ள முடியும். ஏனெனில் பணவீக்கத்தின் காரணமாக மருத்துவச் செலவுகள் முதல் நமது அன்றாட தேவைகள் வரை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பணியில் இருக்கும் அனைவருக்கும் அவர்கள் நிறுவனத்திடம் இருந்து மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. பணியின் போது நமக்கு நாம் பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்படும் மருத்துவக் காப்பீடு, நமது பணி ஓய்விற்கு பிறகு நமக்கு அவற்றில் இருந்து பலன் கிடைப்பது இல்லை. நமது ஓய்வுக்காலத்தில் தான் நமக்கு, வயது முதிர்வின் காரணமாக மருத்துவ காப்பீடு தேவைப்படும். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு எந்த ஒரு நிறுவனமும் மருத்துவக் காப்பீடு வழங்குவது இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவக் காப்பீடு எடுப்பது மிகவும் அவசியமானது.
60 வயதுக்கு பின் ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?
நிலையான வைப்பு (Fixed Deposit ) 
நிலையான வைப்பு (fixed Deposit ), ஓய்வூதியத்திற்காக தேர்தெடுக்கப்படும் ஒரு நல்ல முதலீட்டு திட்டமாகும். FD-யில் ஒரு நிலையான லாபகரமான தொகையை வைப்பு தொகையாக வைப்பதால், நமது வைப்பு தொகையின் வட்டி நமக்கு குறிப்பிட்ட நிலையான ஓய்வூதியமாக கிடைக்கிறது, இது நிலையான வருமானத்தை பெற நமக்கு உதவுகிறது. FD பாதுகாப்பானது மற்றும் நமது வைப்பு தொகையில் எத்தகையை மாற்றமும் ஏற்படாது. நமது வைப்பு தொகை எப்போதும் நமக்கு ஒரு முதலீடாக இருக்கும். ஆனால் நமது வைப்பு தொகைக்கு, நமக்கு வரி பிடித்தம் செய்யப்படும்.
Fixed Deposit திட்டத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும்..
அரசு கடன் பத்திரம்
அரசு கடன் பத்திரம்(Bond) என்பது பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசின் பொதுப் பணித்துறை ஆகியவை கடன் பத்திரங்கள் கொண்டு பொது மக்களிடம் பணம் திரட்டுவதற்காக பயன்படுத்தப்டுகிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (பத்திரத்தில் குறிப்பிட்ட கால அளவு) நிறுவனங்கள் அல்லது அரசு நமக்கு வட்டி செலுத்தும். பெரும்பாலும் இந்த வகைப் பத்திரங்களை அரசே விற்பதால் இதில் அதிக பாதுகாப்பு உள்ளது. அரசு பத்திரத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வரி விலக்கும் பெறலாம். ஆனால் அரசு எப்போதும் கடன் பத்திரங்களை விற்பது இல்லை.
தங்க கடன் பாத்திரம்
மத்திய அரசு தங்க பத்திர திட்டம் அனைத்து தபால்துறை அலுவலகங்களிலும் செயல்படுத்த தொடங்கி விட்டது. தனிநபர் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல், அதிகபட்சமாக நான்கு கிலோ வரை, இத்திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம். முதலீடு செய்யும் தொகைக்கு, இன்றைய தங்க விலைக்கு சமமாக 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தங்கம் விலை அதிகரித்து வரும் இந்த நாட்களில் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இந்தப் பத்திரங்களின் வருவாய் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நமது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் இப்போதே சேமிக்க ஆரம்பித்தால் நமது ஒய்வு காலத்தில் ஒரு நல்ல தொகை நமக்கு வட்டியாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும். தங்க பத்திரத்தில் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
ஜீரோ கூப்பன் பத்திரம்
இதுவும் தங்க கடன் பத்திரம் போல் ஒரு கடன் பத்திரம் என்றாலும், இதன் செயல்பாடு சற்று வித்தியாசமானது. நீங்கள் ஒரு பத்திரத்தை வாங்கும் போது அந்த பத்திரத்தின் விலையை (Face Value ) விட குறைவான விலைக்கு வாங்குவீர்கள். ஆனால் உங்களுக்கு பத்திரத்தின் மதிப்பிற்கும் நீங்கள் செலுத்திய தொகைக்கும் உள்ள விகிதத்தின் அடிப்படையில் உங்களுக்கு வட்டி வழங்கப்படும். ஜீரோ கூப்பன் பத்திரம் முதலீடு செய்வதால், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு வரி விலக்கு கிடைக்கிறது.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |