Investment in Post Office Time Deposit in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவிலும் ஒரு முதலீடு பற்றிய திட்டத்தினை தான் பார்க்கப்போகிறோம். இதற்கு முன்பாக நாம் எண்ணற்ற முதலீடு திட்டங்கள் பற்றியும், அதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசலாக பெறலாம் என்று தெரிந்துகொண்டு இருப்போம். அந்த வகையில் இன்று போஸ்ட் ஆபீசில் இல்ல டைம் டெபாசிட் திட்டத்தில் ஒரு நபர் தோராயமான ஒரு தொகையை முதலீடு செய்வதனால் கிடைக்கும் மொத்த வட்டி மற்றும் அசலாக எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்று உதாரணத்துடன் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்:
இத்தகைய டைம் டெபாசிட் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம். மேலும் இத்தகைய திட்டமானது உங்களது ஊரில் உள்ள போஸ்ட் ஆபீஸிலேயே இருக்கிறது.
சேமிப்பு தொகை:
இதில் நீங்கள் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகமாக எவ்வளவு ரூபாய் வரையிலும் முதலீடு செய்து கொள்ளலாம். மேலும் இதில் முதலீடு தொகை உங்களது விருப்பமே.
வட்டி விகிதம்%:
இத்தகைய திட்டத்தில் உங்களுக்கான வட்டி விகிதம் என்பது முதிர்வு காலத்தை பொறுத்தே அமையும்.
Post Office Time Deposit Interest Rate | |||
1 வருடம் | 2 வருடம் | 3 வருடம் | 5 வருடம் |
6.90% | 7.00% | 7.00% | 7.50% |
சேமிப்பு காலம்:
தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான சேமிப்பு காலம் என்பது 1,2,3 மற்றும் 5 என இவ்வாறு உள்ளது. ஆகவே அதற்கு ஏற்றவாறு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
தபால் துறையில் 5000 ரூபாய் செலுத்தி 8% வட்டியுடன் 27 லட்சம் பெற வேண்டுமா
3 வருடத்தில் 1 லட்சம் செலுத்தினால் கிடைக்கும் அசல் மற்றும் வட்டி எவ்வளவு:
சேமிப்பு தொகை: 1,00,000 ரூபாய்
வட்டி விகிதம்%: 7%
சேமிப்பு காலம்: 3 ஆண்டு
மொத்த வட்டி தொகை: 23,144 ரூபாய்
அசல் தொகை: 1,23,144 ரூபாய்
போஸ்ட் ஆபீசில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் மொத்த வட்டி தொகை எவ்வளவு
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |