இப்படி முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்..!

Investment plan in tamil

இப்படி முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்..! Investment Ideas in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் எல்லா நாளும் ஒரே நாள் போல் இருக்காது. ஒரு நாள் ஏற்றத்துடன் இருக்கும் இன்னொரு நாள் அவற்றில் இரக்கமும் காணப்படும். உதாரணத்திற்கு பங்கு சந்தை போன்று தான். ஆக ஏற்றம் வரும்போது எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அது போன்று இறக்கம் வரும்போதும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்கு கஷ்டம் வரும்போது போது அதனை எதிர்கொள்வதற்கு பதில் ஏதாவது சேமிப்புத்திட்டத்தில் இணைத்து சேமிப்பதன் மூலம் உங்களுக்கு கஷ்டம் ஏற்படும் போதும் அந்த சேமிப்பு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆக கண்டிப்பாக அனைவருமே சிறிய அளவிலாவது சேமிக்க வேண்டும். சரி வாங்க இன்றைய பதிவில் உங்களுடைய சேமிப்பை எப்படி முதலீடு செய்தால் நல்ல வருமானத்தை பெறமுடியும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

சேமிப்பதற்கான டிப்ஸ்:Investment plan

உலகம் முழுவதும் சேமிப்பு மற்றும் முதலீட்டில் வெற்றிபெற்றவர்கள் பின்பற்றும் Formal என்னவென்றால் வருமானத்தில் இருந்து முதலில் சேமிப்பை எடுத்து வைத்த பிறகு, மீதமுள்ள பணத்தை செலவு செய்வதாகும். அதுவே உங்கள் நன்மைக்காக இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் வருமானத்தில் இருந்து முதலில் காப்பீட்டிற்கு ஒரு தொகையை ஒதுக்கி வைக்கவும், அதன் பிறகு சேமிப்பிற்கு ஒரு தொகையை ஒதுக்கி வைத்தப்பிற்கு மீதமுள்ள பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
SIP-யில் 100 ரூபாய் முதலீடு செய்தால் 10 லட்சம் வருமானம் கிடைக்கும்..!

உங்கள் வருமானத்தில் 50% வீட்டு செலவுகளுக்கும், 20% சேமிப்பிற்கும், 30% உங்கள் விருப்பத்திற்கும் என்று தனி தனியாக பிரித்து செலவு செய்ய வேண்டும்.

சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று தான், ஆனால் வெறும் சேமிப்பு மட்டும் ஒருவரை பணக்காரராக மாற்றிவிட்டது. உங்கள் சேமிப்பை எந்த திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என்பதில் கவனம் தேவை. அதாவது உங்கள் சேமிப்பை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்வதில் கவனமாக இருங்கள்.

நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தபிறகு நீண்டகால முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது தான் சிறந்தது. அதேபோல் அந்த முதலீட்டில் ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் பிள்ளையின் படிப்பிற்கு அல்லது நிறுமணத்திற்கு அல்லது தொழிலுக்கு என்று ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ளுங்கள்.

இது போன்று குறிக்கோளுடன் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் இறுதியில் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
130 ரூபாய் முதலீடு செய்தால் 11 லட்சம் வரை கிடைக்கும்..! நல்ல திட்டம் அல்லவா உடனே Investment பண்ணிடுங்க..!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு