லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன? – Liquid Funds Meaning in Tamil
Liquid Funds Tamil – லிக்விட் பண்டுகள் பொதுவாக குறுகிய கால (Short Term) செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளாகும். அதாவது அரசாங்க செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும். பொதுவாக நடுத்தர மக்கள் RD அல்லது FD தான் முதலீடு செய்வாங்க ஆனால் இந்த ஆர்டி அல்லது பிக்சட் டெபாசிட்டில் செய்யும் முதலீடு லாக் இன் பீரியட் இருக்கும். அந்த பணத்தை அவசர கால தேவைக்கு எடுப்பதற்கு பெனால்டி கட்டவேண்டியதாக இருக்கும். ஆனால் இந்த லிக்விட் ஃபண்ட்கள் அது மாதிரி எந்த ஒரு விதிகளும் கிடையாது. ஆக நீங்கள் உங்கள் பணத்தினை 24 மணி நேரத்துக்குள் திரும்ப பெற முடியும். அதோடு இந்த ஃபண்டுகளுக்கு நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் என்பது கிடையாது. அப்படி ஒரு சிறந்த முதலீடு தான் இந்த லிக்விட் பண்டு. சரி வாங்க லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன? இவற்றில் முதலீடு செய்தால் வங்கியை விட அதிகமாக வருமானம் கிடைப்பது உண்மை தான என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
ஏன் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்? – Liquid Funds Meaning in Tamil
♦ பங்கு சந்தை சார்ந்த முதலீடு திட்டம் கிடையாது.
♦ லிக்விட் ஃபண்ட் மிக குறைந்த ரிஸ்க் கொண்ட ஒரு பண்ட் வகையை சேர்ந்தது ஆகும்.
♦ தற்பொழுது வங்கி கணக்கில் SBI-யில் 2.75% Returns தராங்க, அதனால லிக்விட் பண்டில் 4% முதல் 5% வரை Returns கிடைக்கும்.
♦ இந்த முதலீட்டு திட்டத்தில் இந்த ஒரு லாக் இன் பீரியட் கிடையாது எப்பொழுது வேணுமானாலும் நமது பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதிலும் சில லிக்விட் பண்டுகள் 30 நிமிடங்களிற்குள் பணத்தை கொடுக்கின்றன.
♦ பணம் எப்பொழுது தேவையோ அப்பொழுது உங்கள் முதலீட்டை திரும்பப் பெறுதல் (withdrawal) எடுக்க முடியும். அதாவது விற்பனை செய்த குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்குள் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.
♦ சில லிக்விட் பண்ட் ATM கார்ட் வசதிகளையும் வழங்குகின்றன. அவற்றில் Nippon India Liquid Fund ATM கார்ட் வழங்குகின்றன. அவற்றை நீங்கள் வங்கிகளில் கொடுக்கப்படும் ATM கார்டு போல் பயன்படுத்தலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → முதலீடுகளுக்கான சிறந்த ஐந்து இன்டெக்ஸ் ஃபண்ட்கள்..! |
லிக்விட் ஃபண்ட் எதில் முதலீடு செய்யும்?
Treasury Bills, Commercial Papers, Certificate, of Deposit, Money Market Instrument போன்ற பத்துக்கானவற்றில் தான் முதலீடு செய்வார்கள். ஆகவே நீங்கள் முதலீடு செய்யும் பணம் நஷ்டம் அடைந்துவிடும் என்று அச்சம்கொள்ள வேண்டாம். இருப்பினும் நீங்கள் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் இதனுடைய போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கு என்பதை மட்டும் தெரிந்துகொள்ளவும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
லிக்விட் ஃபண்டில் ஆரம்பத்தில் 5000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். அதன் பிறகு மாத மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்→ பணத்தை சேமிக்க சிறந்த வழிகள் |
எவ்வளவும் Returns கிடைக்கும்?
வங்கியில் போடும் பணத்திற்கும், லிக்விட் பண்டில் முதலீடு செய்யும் பணத்திற்கும் எவ்வளவு Returns கிடைக்கும் என்று கீழ் உள்ள அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
முதலீடு | வங்கியின் வட்டி விகிதம் | Tax Slab | Post Tax | Bank Return | லிக்விட் ஃபண்ட் வட்டி விகிதம் | Post Tax | லிக்விட் ஃபண்ட் Return |
1,00,000 | 2.75% | 10% | 2.47% | 2,464.93 | 4% | 3.60% | 3,600 |
1,00,000 | 2.75% | 20% | 2.20% | 2,195.97 | 4% | 3.20% | 3,200 |
1,00,000 | 2.75% | 30% | 1.92% | 1,916.93 | 4% | 2.80% | 2,800 |
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதில் முதலீடு செய்யலாம். மைனர்கள் அவரவர் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் முதலீடு செய்யலாம். இதற்காக அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று தேவை. அதோடு உங்களது வங்கி காசோலையும் தேவைப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்→ உங்கள் சேமிப்பை அதிகரிக்க சிறந்த 5 வழிகள் இதோ..! |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |