MIS or NSC Which is Better
பொதுவாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் தான் நாம் அதிகமாக சேமிக்க வேண்டும் என்று நினைப்போம். அதற்கு முதல் காரணம் அங்கு உள்ள திட்டங்களில் அதிகமாக வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு நாம் வட்டி விகிதத்தினை மட்டும் பார்த்து ஒரு திட்டத்தில் சேர வேண்டும் என்று நினைக்கும் போது அதே போஸ்ட் ஆபீசில் மற்றொரு திட்டத்திலும் வட்டி விகிதம் கூடுதலாக வழங்கப்பட்டு கொண்டிருக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பத்திற்கு உள்ளாகி விடுவோம். ஆனால் நாம் எந்த ஒரு திட்டத்தில் முதலில் முதலீடு செய்ய விரும்பினாலும் வெறும் வட்டி விகிதத்தினை மட்டுமே வைத்து கணக்கிட கூடாது. அதனால் இன்று தபால் துறையில் உள்ள MIS or NSC இந்த இரண்டு திட்டங்களில் எது சிறந்தது என்றும், எதில் அதிக லாபம் வரும் என்பதையும் ஒப்பிட்டு பார்த்து தெரிந்துக்கொள்வோம் வாங்க நண்பர்களே..!
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
NSC என்பதின் தமிழ் அர்த்தம் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஆகும். இந்த திட்டம் ஆனது ஒரு நிலையான சேமிப்பு தொகையினை வழங்கக்கூடிய சேமிப்பு திட்டம் ஆகும். மேலும் இந்த திட்டத்தினை நீங்கள் போஸ்ட் ஆபீஸிலோ அல்லது வங்கியிலோ ஓபன் செய்து கொள்ளலாம். இது சேமிப்பு சான்றிதழ் திட்டம் என்பதால் முதிர்வு காலம் முடிந்த பிறகு இதற்கான பத்திரம் வழங்கப்படும்.
- இதில் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை தொகை 1000 ரூபாய். மேலும் அதிகபட்ச தொகை என்பது வரம்பில் இல்லை.
- இதற்கான வட்டி விகிதமாக தோராயமாக 7.7% வரை அளிக்கப்படுகிறது. மேலும் இதனுடைய முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.
- நீங்கள் NSC திட்டத்தில் சேர விரும்பினால் வருடத்திற்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டு முதிர்வு காலம் முடிந்த பிறகு வட்டி தொகை அளிக்கப்படும்.
- அதேபோல் இத்தகைய சேமிப்பு திட்டத்தில் கடன் பெரும் வசதி உள்ளது. மேலும் இதில் வருமான வரி விதிகளின்படி பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு உண்டு.
- NSC திட்டத்தில் 3 நபர்கள் சேர்ந்து கூட்டு சேமிப்பு கணக்கினையும் ஓபன் செய்து கொள்ளலாம்.
- மேலும் இந்த NSC திட்டம் ஒரு பாதுக்கான மற்றும் நீட்டிப்பு காலத்தினை வழங்கக்கூடிய ஒரு திட்டமாக உள்ளது.
Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா |
மாதாந்திர வருமானத் திட்டம்:
போஸ்ட் ஆபீசில் உள்ள MIS என்ற திட்டத்திற்கு தமிழில் மாதாந்திர வருமானம் திட்டம் என்பது அர்த்தம் ஆகும். மாதந்தோறும் ஒரு நிலையான வருமானத்தை பெற வேண்டும் என்பவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டம் மிகவும் ஏற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
- மாதாந்திர வருமானம் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம்.
- அதேபோல் இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச தொகை என்று பார்த்தால் 1,000 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகை என்பது 4,50,000 ரூபாய் ஆகும்.
- இந்த கணக்கினை மூன்று நபர்கள் கூட்டு கணக்காக வேண்டுமானாலும் ஆரம்பித்து கொள்ளலாம். அதற்கான அதிகபட்ச தொகை 9,00,000 ரூபாய் ஆகும்.
- இத்தகைய திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதமாக 7.4% அளிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கான வட்டி விகிதம் மாதம் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
- தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடமாகும்.
- மேலும் இதில் வருமான வரி விதிகளின்படி பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கிடையாது.
MIS or NSC இரண்டில் எது சிறந்தது:
நாம் சேரும் எந்த ஒரு திட்டதினையும் அதனுடைய வட்டி விகிதத்தினை மட்டும் வைத்து கணக்கிடக்கூடாது.
அந்த வகையில் மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் சேமிப்பு தொகை, வட்டி விதிகம் மற்றும் இதர நன்மைகளின் அடிப்படையில் சிறந்த ஒன்றாக உள்ளது.
FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |