பணத்தை சேமிக்க சிறந்த வழிகள் | Money Saving Tips in Tamil

Money Saving Tips in Tamil

Money Save Tips in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் பணத்தை சேமிக்க வழிகளை பற்றி பார்க்கப்போகிறோம். அனைவருக்கும் பொதுவான ஆசை தான் பணத்தை அதிகம் சேர்க்கவேண்டும் என்பது. ஆனால் எப்படி செய்தாலும் பணத்தை வைத்துக்கொள்ள முடியவில்லை. அது ஏன் என்று தான் தெரியவில்லை? ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் தான் செய்யமுடியும். பணத்தையே சம்பாதிக்க முடிகிறது நம்மால் சேமிக்க முடியாதா?  இனி அதனை பற்றி கவலை கொள்ளவேண்டாம் அனைவருக்கும் ஏற்றவகையில் இன்று பணத்தை சேமிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம்.

பணம் சம்பாதிக்க மந்திரம்

பணத்தை சேமிக்க சிறந்த வழிகள்:

TIPS  -1:

இப்போது  இருக்கின்ற காலத்தில் அனைவரும் 15,000 ரூபாய்க்கு மேல் தான் சம்பாதிப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் மாதத்திற்கு 3000 வரை சேமிக்க முடியும் சேமித்து அதனை வைத்துக்கொள்ளாதீர்கள் அந்த பணத்தில் மாதம் மாதம் அரை கிராம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அது பிற்காலத்தில் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும் ஏனென்றால் இப்போது இதில் காசு போட்டாலும் கிடைக்குமா என்ற அவநம்பிக்கையில் போடுகிறார்கள். ஆனால் நீங்கள் தங்கத்தின் மீது முதலீடு போட்டால் அது பெரிய அளவில் நன்மை கிடைக்கும்.

Tips -2:

அனைத்து குடும்பத்திலும் உள்ளது தான் கடன். அப்படி இருக்கும்பட்சத்தில் அதனை கொடுத்துவிடுங்கள். எல்லா கடன்களையும் எப்படி ஒரே நேரத்தில் கொடுக்க முடியும்? இப்போதே அதிகமாக கடன் இருக்கிறது அதனை எப்படி கொடுப்பது என்று யோசித்து வருகிறேன். சரியாக சொல்கிறீர்கள் ஆனால் ஏற்கனவே இருக்கின்ற கடனுடன் இன்னொரு கடன் சேர்த்து வாங்கி நீங்கள் வாங்கியிருந்த முழு கடனையும் செலுத்திவிடுங்கள். முன்பு அனைத்து கடனுக்காக உழைத்தீர்கள் இப்போது ஒரே கடனாக மாற்றி உழைக்க போகிறீர்கள். இப்போது பணமும் சேமிக்க முடியும் அந்த ஒரே கடனாக இருக்கும் அதுவே உங்களுக்கு இன்னும் நன்மையை அளிக்கும்.

Tips -3:

முக்கியமாக இந்த கேள்வி இருக்கும் கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு அதனை சரியான நேரத்தில் கடனை கட்டி விடுங்கள். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் நீங்கள் காட்டாமல் இருந்தால் உங்களுடைய சிபில் ஸ்கோர் குறைவாகும் வாய்ப்புள்ளது அதனால் பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கடன் பெற முடியாமலும் போகலாம். அதனால் வாங்கும் கிரெடிட் கார்டுகளை  சரியாக கட்டிவிடுங்கள்.

Tips -4:

ஒரு மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் இன்சூரன்ஸ் போட்டால் போதுமா என்று கேட்காதீர்கள். நாம் அனைவரும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க போகிறது இல்லை அவருக்கும் வயது முதிர்வு ஏற்படும். அதனால் பிற்காலத்தில் நம்மை பற்றி கவலை படாமல் பணத்திற்காக நம்மை சார்ந்தவர்கள் யோசிக்க கூடாது அவர்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அனைவரும் உயிர்காப்பீடு செய்து பணம் போட்டு வாருங்கள் அது பிற்காலத்தில் பணத்தை செலவு செய்யாமலும் சேமிக்கவும் உதவும்.

வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க 10 வழிகள்..!

Tips -5:

குடும்ப பட்சஜெட்டில் குறைவாக போட வேண்டும். மாதம் முதலிலே போட்டுவிடுங்கள் பணத்திற்கு தகுந்தது போல் தான் பட்சஜெட்டில் குறைத்துக்கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இப்போது அதிகளவு குடும்பத்தில் இரண்டு நபர்கள் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்பவர்கள் ஒருவருடைய சம்பளத்தை மொத்தமாக வங்கியில் போட்டுவிடுங்கள் அது பிற்காலத்தில் உங்களின் சேமிப்பை அதிகப்படுத்தும். இந்த ஐந்து விஷயத்தையும் பின்பற்றினால் போதும் நிச்சயம் பணத்தை சேமிக்கவும் முடியும் பிற்காலத்தில் கஷ்டப்படாமல் வாழலாம்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com