Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Mutual Funds Information in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… இன்றைய பதிவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான சில முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ளா போகிறோம். அனைவருமே நாம் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பதற்கும், அந்த பணத்தை பலமடங்கு பெருக்குவதற்கும் நாம் சரியான வழியில் முதலீடு செய்ய வேண்டும்.

இன்று பெரும்பாலான மக்கள் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் இருக்கிறது. அதுபோல மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்கள் இந்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இன்று இந்த பதிவின் மூலம் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள சில முக்கியமான தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பணத்தை சேமிப்பது நல்லதா..? முதலீடு செய்வது நல்லதா..?

மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்:

மியூட்ச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் இருக்கின்றது என்று சிலர் கூறுகின்றனர். அதேசமயம் சில மக்கள் மியூட்ச்சுவல் ஃபண்ட் பற்றி தவறாகவே புரிந்து கொண்டு அதில் முதலீடு செய்வதற்கு தயங்குகின்றன.

இந்த கால கட்டத்திலும் சில மக்கள் வங்கி சேவைகள் மற்றும் பிக்சட் டெபாசிட்டுக்கள் போன்றவற்றிலே தங்களின் பணத்தை சேமித்து வைக்கின்றனர். சில மக்கள் இந்த சேவைகளை மட்டும் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

பணத்தை சேமித்து வைப்பதை விட முதலீடு செய்வதே மேல் என்பதை புரிந்து  கொள்ளுங்கள். அந்த வகையில் நீங்கள் மியூட்ச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் இந்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் அதை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே அதில் முதலீடு செய்ய வேண்டும்.

Net Asset Value in Tamil: 

Net Asset Value என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இருக்க கூடிய யூனிட் விலையாகும். இந்த NAV மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கீழ் உள்ள சொத்து மற்றும் மொத்த நிலுவையில் உள்ள யூனிட்களைப் பொறுத்துள்ளது.

பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் குறைந்த NAV உள்ள நிறுவனத்தையே தேர்வு செய்கின்றார்கள். நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், முதல் நிறுவனத்தில் நீங்கள் 500 யூனிட்டும், இரண்டாவது நிறுவனத்தில் 200 யூனிட்டும் உங்களுக்கு கிடைக்கும்.

NAV எண்ணிக்கையின் மதிப்பு வித்தியாசமாக இருந்தாலும் அது இரண்டுமே ஓன்று தான். NAV மதிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும் அதன் மதிப்பு ஒன்றாக தான் இருக்கும்.

அதனால் NAV மதிப்பை வைத்து முதலீடு செய்வதை மறந்து விடுங்கள்.

நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இதுபோன்ற தவறுகளை செய்கிறீர்களா..?

ஆலோசனை: 

இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் கடந்த கால செயல்திறனை வைத்து தான் முதலீடு செய்கிறார்கள். அதிலும் சிலர் கடந்த கால செயல் திறனை நினைவில் கொண்டு முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இதுபோன்ற குழப்பங்கள் தவறான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க செய்கிறது. அதனால் இதுபோன்ற குழப்பங்களை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்யுங்கள்.

SIP நிறுத்தாமல் இருக்க வேண்டும்: 

மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மற்ற நிறுவனங்களில் ஏற்றம் இறக்கம் கண்டிப்பாக இருக்கும். அது நம் அனைவருக்குமே தெரியும். பல மக்கள் பங்கு சந்தையின் மதிப்பு இறங்கும் போது அதை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால SIP -களை நிறுத்த கூடாது. முதலீட்டாளர்கள் SPI-யை குறுகிய காலத்தில் நிறுத்துவதன் மூலம் வருமானம் குறைய தொடங்குகிறது.

நீங்கள் SPI முறையில் முதலீடு செய்திருந்தால் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறக் கூடாது. மேலும், இதுபோன்று செய்வதால் முதலீட்டாளர்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும்.

பங்குச்சந்தை மோசமான நிலையில் இருந்தாலும் தங்கள் SIPகளை தொடர வேண்டும்.

மேலும் உங்களுக்கு முதலீடு செய்வதில் சந்தேகம் இருந்தால் முதலீடு செய்யும் நிறுவனத்தில் உள்ள ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement