Mutual Funds vs Share Market
பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது முக்கியமானது. சேமிக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். பங்கு சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலானவர்கள் முதலீடு அதிகம் செய்கின்றனர். மியூச்சுவல் பண்டிலும் முதலீடு அதிகம் செய்கின்றனர். அதனால் இந்த பதிவில் மியூச்சுவல் மற்றும் பங்குசந்தை இரண்டில் எதில் முதலீடு செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
மியூச்சுவல் பண்ட் VS பங்குச்சந்தை
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் போது பல்வேறு துறைகள் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் ஒரு துறையில் லாபம் குறைந்தாலும், நஷ்டம் வந்தாலும் மற்ற துறைகளில் லாபம் கிடைக்கும்.
Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?
ஆனால் பங்கு சந்தைகளில் இப்படியில்லை நீங்கள் முதலீடு செய்து பங்கு சந்தை சரிவை கண்டால் நஷ்டம் தான். பங்குசந்தை உயர்ந்து வந்தாலும் இன்னும் வர நாட்களில் எவ்வளவு அதிகரிக்கும், சரிவு அடைந்தால் என்ன செய்வது, எவ்வளவு குறையும் என்றெல்லாம் தெரியாது. லாபம் கிடைத்தாலும் பெரிய அளவில் இருக்கும், நஷ்டம் அடைந்தாலும் பெரிய அளவில் இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகளிலேயே பல வகையான ஃபண்டுகள்உள்ளன. அதில் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்து கொள்ளலாம். பல ஃபண்டுகளை தேர்தெடுக்கலாம். ஆக ஒரே இடத்தில் உங்கள் முதலீட்டினை முடங்குவதற்கு பதிலாக பிரித்து போடும் போது உங்களுக்கு ரிஸ்க் குறைவு. லாபமும் சராசரியாக இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் திறமையான ஃபண்ட் ஆலோசகர் மூலம் ஆலோசிக்கப்பட்டு முதலீடு செய்யப்படும்.
சந்தையில் உள்ள ரிஸ்கினை எதிர்கொள்ள போதிய திறன் இருந்தால் அதனை எதிர்கொள்ளலாம். அப்படியில்லை என்னால் முடியாது என்றால், நிச்சயம் நீங்கள் பங்கு சந்தைக்கு முதலீட்டுக்கு சரியானவர் அல்ல. உங்களுக்கு சரியான ஆப்சன் மியூச்சுவல் ஃபண்டுகளே. இல்லை என்னால் எதையும் சமாளித்துவிடுவேன் எனில் பங்கு சந்தைகளில் நல்ல லாபத்தினை பார்க்கலாம். இதற்காக சந்தைக்கு என்று சிறிது கால நேரத்தினை நீங்கள் செலவிட வேண்டும். இதே மியூச்சுவல் ஃபண்ட் எனில் ஃபண்ட் மேனேஜர்கள் அதனை பார்த்து கொள்வார்கள்.
உங்களுக்கு பங்கு சந்தை பற்றி தெரிந்திருந்தால் அதில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். இல்லை இதில் முதலீடு செய்வது புதிது என்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் மியூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க் குறைவாக இருக்கும்.Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |