Mutual Funds vs Stocks in Tamil
மக்கள் அதிகமாக முதலீடு செய்து வருவது என்பது மியூச்சுவல் பண்ட்டில் தான். அதிகளவு மக்களுக்கு மியூச்சுவல் பண்ட் என்ன என்பது தெரிகிறது. அதைவிட முக்கியமானது என்னவென்றால். நான் முதலீடு செய்வதற்கு மியூச்சுவல் பண்ட் சிறந்ததா அல்லது பங்கு சந்தை சிறந்ததா என்று?
மக்கள் அனைவருமே கணினி உலகத்திற்கு தகுந்தது போல் மாறி வருகிறார்கள் நாமும் அதற்கு ஏற்றது போல் மாறிவிடவும். வாங்க இப்போது மியூச்சுவல் பண்ட், பங்கு சந்தை இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
Mutual Funds vs Stocks இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்:
♦ பங்குசந்தையில் முதலீடு செய்வது முதலீடு செய்யும் தனி நபரின் முடிகளாக மட்டுமே இருக்கும். அதே மியூச்சுவல் பண்ட் எடுத்துக்கொண்டால் பண்ட் மேலாராக முடிவுகளை எடுப்பார்கள்.
♦ பங்குகளை முதலீடு செய்யும் போது அவருடைய தனிப்பட்ட ஆராய்ச்சியாக இருக்கும் அதை பற்றி முழு விவரத்தை அவரே தெரிந்துகொள்வார். ஆனால் மியூச்சுவல் பண்ட் அப்படி இல்லை அனைத்துமே அந்த பகுதியை நிர்வகிக்கிறது. இதன் மூலம் முதலீட்டாளருக்கு நேரம் மிச்சம் ஆகிறது.
Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
♦ முதலீட்டாளர்கள் பங்குகளில் தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்ய முடியும் அதேபோல் பல பங்குகளில் முதலீடு செய்யவும் முடியும். ஆனால் மியூச்சுவல் பண்ட்டில் முதலீட்டு நோக்கம் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் முழுத் தொகையும் பலதரப்பட்ட சொத்துக்களில் முதலீடு செய்யப்படுகிறது.
♦ பங்குச்சந்தை அதிக ரிஸ்க் இருக்கும் அதேபோல் தான் மியூச்சுவல் பண்ட்ம் அப்படி தான் ஆனால் பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைகிறது.
♦ பங்குகளில் முதலீடு செய்வதால் அந்நிறுவனத்தின் ஒரு பகுதியை மட்டும் சொந்தமாக வைத்திருக்க முடிகிறது. அதேபோல் மியூச்சுவல் பண்ட் பத்திரங்கள் போன்ற பல்வேறு சொத்துக்களிலும் முதலீடு செய்யலாம்.
♦ பங்குசந்தையில் பெரிய பங்கேற்பாளர்கள் இருப்பதால். தனியாக முதலீடு செய்யும் ஒரு சாதாரண நபரைக் காட்டிலும் அவர்களுக்கு அதிக அறிவும் யுத்திகளையும் அறிய முடியும்.
♦ பங்குசத்தையில் முதலீடு செய்வதற்கு சில நேரங்களில் அதிக தொகை தேவைபடும் சில நேரங்களில் பங்குகள் அதிகமாக இருக்கும் ஆகவே அந்த சமயத்தில் பங்குகளில் முதலீடு செய்ய முடியாது, ஆனால் மியூச்சுவல் பண்ட் பலதரப்பட்ட மக்களின் பணத்தை ஒன்று சேர்த்து அதே நிறுவனத்தின் ஒரு பகுதியை வாங்க உங்களுக்கு உதவி செய்கிறது.
♦ பங்குகளில் நேரடியாக முதலீடு செய்யும் போது அதில் உங்கள் விருப்பம் இருக்கும் நீங்கள் தான் தேர்வு செய்வீர்கள் ஆனால் மியூச்சுவல் பண்ட் முதலீடு செய்யும் போது உங்களுடைய விருப்பம் சொல்ல முடியாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |