5 வருடத்தில் 4 லட்சம் பெறும் அருமையான திட்டம்..! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க .!

Advertisement

தேசிய சேமிப்பு பத்திர திட்டம்

இன்றைய பதிவில் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்துகொள்வோம். எவ்வளவு தான் சம்பாரித்தாலும் பணம் கையிலே வைத்துக்கொள்ள முடியவில்லை என்ற கவலைகள் இருக்கும். நீங்கள் வாங்கும் சம்பளத்தை வீட்டிலே வைத்திருந்தால் சேமிக்க முடியாது. நீங்கள் வங்கிக்கெல்லாம் செல்ல முடியாது என்றால் எல்லாம் தர மக்களுக்கும் பொருந்த கூடிய அளவில் தபால் துறையில் அசத்தலான திட்டங்கள் இருக்கிறது. தபால் துறை திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள். அந்த வகையில் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம்:

ஒவ்வொரு சேமிப்பு திட்டத்திற்கும் முதிர்வு காலம் இருக்கும். அந்த வகையில் இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்

வயது தகுதி:

இத்திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சேமிப்பு திட்டத்தின் முதலீடு:

இத்திட்டத்தில் குறைந்த பட்சமாக  1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 5 வருடத்திற்கு பிறகு 14 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதுவே நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 6,94,746 ரூபாய் கிடைக்கும்.

வட்டி விகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்தில் 6.8 % வட்டி தபால் நிலையத்தில் தருகிறார்கள். இந்த வட்டி 5 வருடத்திற்கு எந்த வித மாற்றமும் இருக்காது.

இனிமேலும் நேரத்தை கடத்தாமல் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள். இத்திட்டம் மிகவும் பாதுகாப்பான திட்டமாகும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement