NPS Vs PPF in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களை கண்டு மக்கள் தங்களின் எதிர்கால தேவைக்காக சேமிக்க அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள். அதனால் அனைவருமே ஏதாவது ஒருவகையில் சேமிக்க அல்லது முதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இன்றளவும் சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை. விழிப்புணர்வு இருந்தாலும் எதில் முதலீடு அல்லது சேமிப்பது என்ற ஒரு பெரிய கேள்வி உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் இரண்டு முதலீடு முறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல் இன்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவற்றில் எதில் முதலீடு செய்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
மாதாந்திர வருமானத் திட்டம் Vs பிக்சட் டெபாசிட் இவ்விரண்டில் முதலீடு செய்ய எது ஏற்றது
NPS Vs PPF முதலீடு செய்வதற்கு எது சிறந்தது..?
Public Provident Fund அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது முதியோருக்கு வருமான பாதுகாப்பினை வழங்குவதற்காக வரி இல்லாத முதிர்ச்சி தொகையை உருவாக்ககூடிய மத்திய அரசால் நிறுவப்பட்ட நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.
National Pension System அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இது பொது, தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்காக நிறுவப்பட்டது.
மேலும் இந்தத் திட்டத்தில், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பணிக்காலத்தின் மூலம் ஓய்வூதியக் கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். அவர் ஓய்வு பெற்ற பிறகு மொத்த தொகையினையும் பெற்று கொள்ள முடியும்.
இப்பொழுது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
அம்சங்கள் | பொது வருங்கால வைப்பு நிதி (PPF) | தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) |
யார் முதலீடு செய்யலாம் | எந்த இந்திய குடியுரிமையும். ஒருவர் தனது மைனர் குழந்தைகளின் பெயரில் PPF கணக்கைத் திறந்து வரிச் சலுகைகளைப் பெறலாம்
NRI-கள் முதலீடு செய்ய முடியாது |
18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு குறைவான இந்திய குடிமக்கள் NPS கணக்கைத் திறக்கலாம்
NRI-கள் முதலீடு செய்யலாம். |
வட்டிவிகிதம் | 7% முதல் 8 % வரை | 12% முதல் 14% வரை |
முதிர்வு காலம் | ஒரு PPF கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. | முதிர்வு காலம் நிர்ணயிக்கப்படவில்லை. முதலீட்டை உங்களின் 70 வயது வரை நீட்டிக்கலாம். |
முதலீட்டு வரம்பு | ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். | குறைந்தபட்ச பங்களிப்பு ரூ.6,000 ஆகும். நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், உங்கள் சம்பளத்தில் 10% அல்லது உங்கள் மொத்த வருமானத்தில் 10% வரை முதலீடு செய்யலாம். |
வரிச்சலுகை | PPF-ல் செய்யப்படும் அனைத்து டெபாசிட்டுகளும் பிரிவு 80C யின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.
அதேபோல் முதிர்வு காலத்தில் திரட்டப்பட்ட மொத்த தொகை மற்றும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. |
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80CCD(1) இன் கீழ் ரூ.1,50,000 லட்சத்திற்கு மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும், மேலும் பிரிவு 80CCD(2) இன் கீழ் கூடுதலாக ரூ.50,000 – மொத்தம் ரூ.2 லட்சம் வரை தான் வரி சலுகை கிடைக்கும். |
முன்கூட்டியே திரும்பப் பெறுதல் | 7-வது வருடத்திற்குப் பிறகு சில வரம்புகளுடன் பகுதியளவு திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது. | 10 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட சூழ்நிலையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பகுதியளவு திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது. |
கடன் சலுகை | கணக்கு துவங்கிய மூன்றாவது மற்றும் ஆறாவது நிதியாண்டுகளில் நிபந்தனைகளுடன் கடன் கிடைக்கும். | கிடையாது |
வருமானம் | PPF-ல் வட்டிவிகிதங்கள் அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. | வட்டி விகிதம் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே சாத்தியமான வருமானம் அதிகமாக உள்ளது. |
RD Vs PPF இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது தெரியுமா
ஆர்.டி கணக்கு Vs சேமிப்பு கணக்கு இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |