NPS vs PPF Which is Better in Tamil
பணத்தை சம்பாதிப்பதை விட அதை சிறந்த முறையில் சேமித்து வைப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் உழைத்து விட்டு உட்கார்ந்து சாப்பிடும் போது ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் அரசு நிறைய வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில்இன்றைய பதிவில் NPS vs PPF இரண்டு வகையான திட்டங்களில் எதில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை பெற முடியும் என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
NPS:

NPS திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 60 வயது வரை இருக்க வேண்டும். இதில் 60 வயது வரைக்கும் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால் 70 வயது வரை நீட்டித்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
NPS திட்டத்தில் 40% முதலீடு செய்ய வேண்டியிருக்கும், ஆனால் ஓய்வு தொகை பெறும் போது 60% வரை லாபத்தை பெறலாம். இதில் 12% முதல் 14% வரை வட்டி கொடுக்கப்படுகிறது.
NPS திட்டம் சந்தையுடன் இணைந்திருப்பதால் ஆபத்து அதிகமாக இருக்கும்.
பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது சிறந்தது
PPF:
PPF திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வயது வரம்பு இல்லை. இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் கால அளவாக 15 வருடம் கொடுக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் தொகையாக 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
PPF -ல் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி மாற்றப்படுகிறது. தற்போதையை வட்டியாக 7.1% வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்படுவதால் பாதுகாப்பான திட்டமாக இருக்கும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்து 3 வருடத்திற்கு பிறகு கடன் வழங்கி கொள்ளும் வசதி இருக்கிறது.
ஓய்வூதியம் தொகையை பெறுவதற்கு NPS சிறந்ததாக இருக்கிறது, ஆனால் நீங்கள் பிள்ளைகளின் திருமண செலவு, குழந்தைகளின் கல்வி போன்ற விஷயங்களுக்காக சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் PPF திட்டம் சிறந்ததாக இருக்கும்.
போஸ்ட் ஆபிஸ் TD (Vs) SBI வங்கியின் FD முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா..?
| மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |














