Rd or NSC இரண்டு முதலீட்டில் எது சிறந்தது.?

Advertisement

Nsc or Rd Which is Better

கணவன், மனைவி இரண்டு நபரும் சம்பாதித்தாலும் ஒரு நாள் சம்பளம் வருவதற்கு தாமதம் ஆனாலும் அதை சமாளிப்பது பெரிய கஷ்டமாக இருக்கும். அதனால் தான் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பது ரொம்ப முக்கியமான ஒன்று. நாம் ஏதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்து அதில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் நாம் சேமிக்கும் திட்டத்திலிருந்து முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்றெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் RD மற்றும் NSC இரண்டு திட்டத்தில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம் வாங்க…

RD:

rd scheme in tamil

ரெக்கரிங் டெபாசிட் என்பது மாதந்தோறும் சேமிக்கும் திட்டமாக இருக்கிறது. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.

குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

இந்த திட்டத்திற்கு வட்டி தொகையாக 5% முதல் 8% வரை வழங்கப்படுகிறது.

Rd திட்டத்தின் முதிர்வு காலம் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை கொடுக்கப்படுகிறது. இவை பாதுகாப்பான திட்டமாக இருக்கும்.

NPS Vs PPF இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும்

NSC:

nsc scheme in tamil

தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது நிலையான வருமான முதலீட்டு திட்டமாகும்.

இந்த திட்டத்தில்  முதலீடு செய்வதற்கு 18 வயது பூர்த்தியடைந்து இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

மேலும் இதில் நீங்கள் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

இதற்கான வட்டி தொகையாக 7% வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்த பிறகு 5 வருடம் மற்றும் 10 வருட கால அளவில் முடித்து கொள்ளலாம்.

எந்த திட்டம் சிறந்தது:

நீங்கள் rd திட்டத்தில் மாதந்தோறும் 2000 ரூபாய் சேமித்தால் 5 வருட கால அளவில் மொத்த தொகையாக 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டி தொகையாக 19,393 ரூபாய் கிடைக்கும்.

அதுவே NSC திட்டத்தில் 50,000 ரூபாய் மொத்த தொகையாக ரூபாய் செலுத்தி முதலீடு செய்கிறீர்கள் என்றால் 5 வருடத்தில் வட்டி தொகையாக 20,128 ரூபாய் கிடைக்கும். அப்போ சேமிப்பு தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 70,128 ரூபாய் கிடைக்கும்.

5 வருடத்தில் கிடைக்கும் வருமானத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது rd திட்டம் சிறந்தது. அதுமட்டுமில்லாமல் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி இந்த வருமானத்தை பெற்று கொள்ளலாம்.

RD Vs PPF இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது தெரியுமா

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

Advertisement