Post Office 5 Lakh SCSS Investment Plan
போஸ்ட் ஆபீசில் மக்கள் பயன்பெறும் விதமாக 8-றிக்கும் மேற்பட்ட திட்டங்கள் ஆனது இருக்கிறது. இத்தகைய திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதிமுறையினையும், பல அம்சங்களையும் கொண்டிருக்கிறது. அதேபோல் அனைத்து முதலீடு திட்டங்களில் அனைவரும் சேர்ந்து சேமிக்க முடியாது. ஏனென்றால் வயது தகுதியே இதற்கு அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தபால் துறையில் உள்ள பல திட்டங்களில் 8.2% வட்டி விகிதமாக சீனியர் சிட்டிசன் திட்டத்திற்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பார்க்கையில் மற்ற திட்டங்களை விட இதில் தான் அதிகப்படியான வட்டி விகிதத்தை கொண்டுள்ளது. ஆகவே இந்த திட்டத்தில் நாம் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு பெற முடியும் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தபால் துறை சீனியர் சிட்டிசன் திட்டம்:
மூத்த குடிமக்களுக்கான இந்த திட்டத்தில் ஒரு நபர் தனியாவோ அல்லது கூட்டாகவோ கணக்கினை தொடங்கலாம். மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேர முடியும்.
சேமிப்பு தொகை:
மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை என்பது 30 லட்சம் ரூபாய் ஆகும். இதில் நீங்கள் டெபாசிட் செய்யும் முன்பே உங்களுக்கான தொகையினை தீர்மானித்து கொள்ள வேண்டும்.
வட்டி விகிதம்%:
போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கு மொத்த வட்டி தொகையாக 8.2% வரை வழங்கபடுகிறது.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்து டெபாசிட் செய்தால் உங்களுக்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். அதுவே மேலும் இதே திட்டத்தில் பயனடைய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.
மேலும் நீட்டிப்பு காலம் 3 வருடம் அளிக்கப்படுகிறது.
கணக்கை முடித்து கொள்ளும் முறை:
இதில் நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் போது 1 வருடத்தில் கணக்கினை முடித்து கொள்ள விரும்பினால் 1.5% தொகை பிடித்தம் செய்யப்படும். ஒருவேளை 2 வருடம் கழித்து கணக்கினை குளோஸ் செய்தால் 1% தொகை பிடிக்கப்படும்.
5 லட்சம் முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?
சேமிப்பு தொகை: 5,00,000 ரூபாய்
வட்டி தொகை: 2,05,000 ரூபாய்
3 மாத வட்டி தொகை: 10,250 ரூபாய்
அசல் தொகை: 7,05,000 ரூபாய்
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |