post office best scheme in tamil
குடும்பத்தில் கணவன் மனைவி என்று இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால் என்ன தான் சம்பாதித்தாலும் வரவும் செலவும் சமமாக இருக்கும். என்னால் 1 ரூபாய் கூட சேமிக்க முடியவில்லை. அப்படியே சேமித்தாலும் எது பயனுள்ளது என்று தெரியவில்லை என்று நினைக்கும் நபர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். போஸ்ட் ஆபீஸில் நடுத்தர மக்கள் என்று எல்லாருமே சேமிக்க முடியும் அதில் எந்த சேமிப்பு திட்டம் பெஸ்ட் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ மியூச்சுவல் ஃபண்டின் புதிய தங்க சேமிப்புத் திட்டம்..!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்:
மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. அதில் Ppf என்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.1 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம் தொகையாக 500 ரூபாயிலுருந்து 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இத்திட்டத்தில் சூப்பரான விஷயம் என்னவென்றால் 4 ஆண்டிற்கு பிறகு நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் பணத்தை கடனாக பெற்றுக்கொள்ளலாம். 7ஆம் ஆண்டிலுருந்து குறிப்பிட்ட பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:
மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 % வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் துவங்கலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் விருப்பப்பட்டால் 5 ஆண்டுக்குள் சேமிப்பு பணத்தை எடுத்து கொள்ளலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்:
பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கபட்டவை தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 % வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டம் 10 வயதுள்ள பெண் குழந்தைகளின் பெயரில் 25 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஆனால் குழந்தைக்கு 18 வயது முடிந்த பிறகு கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்கு 50% சேமிப்பின் பணத்தை பெறலாம். குழந்தையின் எதிர்ப்பாராத உடல் நிலை குறைபாடு பிரச்சனைகளுக்கு மொத்த சேமிப்பின் பணத்தையும் பெற்று கொள்ளலாம்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |