Post Office FD or Bank FD Which is Better in Tamil
சேமிப்பு என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது FD தான். அதாவது பிக்சட் டெபாசிட்கள். இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு நிலையான வருமானம் தரக்கூடியதாகவும் உள்ளது. இவற்றில் சந்தை அபாயம் என்பது இல்லை. அதேபோல் இதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்ட பிறகு தான் நாம் பிக்சட் டெபாசிட்கள் செய்கிறோம் அல்லவா..?
இந்த பிக்சட் டெபாசிட்களில் நீங்கள் தேர்வு செய்யும் காலம் பொறுத்து தான் வட்டி விகிதம் மாறுகிறது. இப்போது மக்கள் அனைவருமே வங்கிக்கு இணையாக இப்போது போஸ்ட் ஆபிஸ் இருப்பதால் அதனை நோக்கி தான் பணத்தை போடுவதற்கு முனைப்பு தருகிறார்கள். இன்னும் சிலர் வட்டி விகிதம் வங்கியில் தான் சிறந்தது என்று சொல்வார்கள்.
புதிதாக ஒருவர் பணத்தை இதில் முதலீடு செய்வது என்றால் வங்கியில் முதலீடு செய்பவர்கள் வங்கியில் முதலீடு செய் என்பார்கள். போஸ்ட் ஆபிஸ்சில் முதலீடு செய்ப்பவர்கள் இதில் முதலீடு செய் என்பார்கள். ஆனால் நமக்கு எது சரி என்று தெரிந்துகொள்ள நாம் தான் சரியான முடிவு எடுக்கவேண்டும். அந்த வகையில் நீங்கள் இதில் முதலீடு செய்தால் சிறந்தது என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..!
Post Office Fd or Bank Fd Which is Better in Tamil:
கடந்த ஆண்டுகள் ரிசர்வ் வங்கியானது ரெப்கோ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் லாபம் பெற முடியும்..!
இரண்டில் எது சிறந்தது:
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது சிறந்தது. அந்த சேமிப்பை வைத்து லாபம் பார்ப்பது தான் இந்த பிக்சட் டெபாசிட். சரி இரண்டில் எது பெஸ்ட்.
போஸ்ட் ஆபிஸில் ஜனவரி 1 முதல் வட்டி விகிதம் 7 சதவீதமாக வழங்கப்படுகிறது. வங்கிகளில் 5 ஆண்டுகால திட்டம் என்றால் அதில் 6.6 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
Post Office Fd Rates:
போஸ்ட் ஆபிஸ் டேம் டெபாசிட்கள் என்றால் அதற்கு 1 வருடம் முதல் தொடங்கி 5 ஆண்டுகள் வரை உள்ளது. அதனுடைய வட்டியை இப்போது தெரிந்து கொள்வோம்..!
ஆண்டுகள் | வட்டி விகிதம் |
01 ஆண்டுகள் | 6.6 சதவீதம் வட்டி |
02 ஆண்டுகள் | 6.8 சதவீதம் வட்டி |
03 ஆண்டுகள் | 6.9 சதவீதம் வட்டி |
05 ஆண்டுகள் | 7 சதவீதம் வட்டி |
Sbi Fixed Deposit Interest Rate:
ஆண்டுகள் | வட்டி விகிதம் |
7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கான டெபாசிட் | 3.00 |
46 நாட்கள் முதல் 179 நாட்களுக்கான டெபாசிட் | 4.50 |
180 நாட்கள் முதல் 210 நாட்களுக்கான டெபாசிட் | 5.25 |
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் டெபாசிட் | 5.75 |
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கு குறைவானது | 6.80 |
2 ஆண்டுகள் முதல் 3 வருடம் வரை | 7.00 |
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை | 6.50 |
5 ஆண்டுகள் முதல் 10 வருடம் வரை | 6.50 |
400 நாட்கள் திட்டம் | 7.10 |
இரண்டியில் எது சிறந்தது என்று உங்களுக்கே தெளிவாக தெரியும் என்று நினைக்கிறேன். போஸ்ட் ஆபிஸ் கிளைகள் குறிபிட்ட இடத்தில் உள்ளன. அதேபோல் கிராமத்தில் இந்த திட்டங்கள் தொடங்கி உள்ளார்கள். போஸ்ட் ஆபிஸில் 5 ஆண்டு திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி கிடைக்கிறது. ஆனால் வங்கியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு 6.5 வட்டி கிடைகிறது. ஆகவே எது சிறந்தது என்று தெரிந்து கொள்ளவும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |