Post Office Gram Suraksha Yojana Scheme in Tamil
மனிதர்களின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமானது. இப்பொழுது நாம் சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைத்தால் தான் நாம் எதிர்காலத்தில் நிம்மதியாக சாப்பிட முடியும். ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் நாம் உழைத்து கொண்டே இருக்க முடியாது. அப்படி நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நம் பதிவில் நிறைய வகையான முதலீட்டு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள ஒரு அருமையான முதலீட்டு திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Gram Suraksha Yojana:
தகுதி:
இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம்.
டெபாசிட் காலம்:
இந்த பாலிசியின் கால அளவானது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 41 ஆண்டுகள் ஆகும்.
பாலிசி தொகை:
பாலிசியினுடைய காப்பீட்டு தொகையாக குறைந்தபட்சம் 10,000/- ரூபாய் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை உள்ள பாலிசி எடுக்காலம்.
இதில் உள்ள டெபாசிட் தொகையை நீங்கள் மாதம் மாதம் அல்லது காலாண்டு, அரையாண்டு, வருடத்திற்கு ஒரு முறை என்று டெபாசிட் செய்து கொள்ளலாம்.
கடன் வசதி:
இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து 4 வருடங்களுக்கு பிறகு கடன் பெற்று கொள்ளும் வசதி இருக்கிறது. 5 ஆண்டுகளுக்குப்பிறகு பாலிசியில் போனஸும் கிடைக்கும்.
இந்த Gram Suraksha Policy-யில் நீங்கள் எவ்வளவு Sum Assured தொகையை தேர்வு செய்துள்ளீர்களோ அந்த தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் Bonus Rate வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு நீங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு பாலிசியை வாங்கிருந்தால் வருடத்திற்கு ஒரு முறை 6000 ரூபாய் Bonus Rate வழங்குவார்கள்.
எவ்வளவு கிடைக்கும்:
பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தினசரி சுமார் 50 ரூபாய் வீதம் மாதம் ரூ.1,515 செலுத்துவதன் மூலம் Rs. 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.
இந்த பாலிசி மூலம் 55 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதிர்ச்சியடைந்த பிறகு ரூ.31,60,000 திரும்ப பெறலாம்.
58 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.33,40,000 திரும்ப பெறலாம்.
60 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.34.60 லட்சம் திரும்ப பெறலாம்.
மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |