Post Office KVP Scheme Interest Rate in Tamil
வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருமே மிகவும் கடினமாக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். அவ்வாறு நாம் கடினமாக உழைத்தும் எந்தவித பயனும் இல்லை நாம் சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக நிலைப்பதில்லை என்று பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். எனவே தான் அனைவருமே தங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து குறைந்த பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நாம் சேமிக்க வேண்டும் என்றவுடனே நமது மனதிற்கு நினைவு வருவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் அது நமக்கு நல்ல லாபத்தை தரும் என்பது தான். ஆனால் ஒரு சிலருக்கு எப்படி முதலீடு செய்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதில் இன்றளவும் பெரிய குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிஸ் KVP சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office KVP Scheme Details in Tamil:
தகுதி:
இந்த KVP சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்தியர்களும் இணையலாம். மேலும் இதில் ஜாயிண்ட் அக்கவுண்ட் கூட திறந்து கொள்ளலாம்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் வரம்பு எதுவும் இல்லை. மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு தொகையே உங்களுக்கு வட்டியாக கிடைக்கும்.
வட்டிவிகிதம்:
இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 7.5% ஆகும்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 115 மாதங்கள் ஆகும்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
முதிர்வு காலம் | ஆண்டு டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
9.5 வருடம் | Rs. 1,00,000 | Rs. 1,00,000 | Rs. 2,00,000 |
Rs. 2,00,000 | Rs. 2,00,000 | Rs. 4,00,000 | |
Rs. 3,00,000 | Rs. 3,00,000 | Rs. 6,00,000 | |
Rs. 4,00,000 | Rs. 4,00,000 | Rs. 8,00,000 |
உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…
போஸ்ட் ஆபீஸில் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து 10,64,862 ரூபாய் பெறக்கூடிய திட்டம் பற்றி தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |