Post Office Mis vs Sbi Mis
பெரும்பாலானவர்கள் தபால் துறை சேமிப்பு திட்டத்தில் தான் சேமிக்கின்றனர். காரணம் வட்டி அதிகமாக கிடைக்கிறது, மற்றொன்று மத்திய அரசின் திட்டமாக உள்ளது. இருந்தாலும் நாம் எதிர்காலத்திற்காக சேமிக்கும் பணத்தை எடுத்த உடனே சேமிக்க தொடங்க மாட்டோம். அந்த வகையில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேமிக்க போகிறீர்கள் என்றால் அதனை ஒப்பிட்டு பார்த்து முதலீடு செய்வது நல்லது. உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதவில் தபால் துறை மாதாந்திர சேமிப்பு திட்டம் VS SBI-யின் மாதாந்திர சேமிப்பு திட்டம் இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
தபால் துறை மாதாந்திர வருமான திட்டம்:
தபால் துறை மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் ஒருவர் தனியாகவோ, அல்லது மூன்று பேர் சேர்ந்து ஜாயிண்ட் கணக்காகவும் தொடங்கலாம்.
இதில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 9 லட்சம் வரையும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
இத்தகைய மாதாந்திர சேமிப்பு கணக்கிற்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்த நாள் முதல் 5 வருடத்தில் கணக்கை முடித்து கொள்ளலாம்.
Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா |
SBI மாதாந்திர வருமான திட்டம்:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.
இதனுடைய முதிர்வு காலமாக 36 மாதம், 60 மாதம், 84 மாதம், 120 மாதங்களில் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு 5.45% முதல் 5.50% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதுவே சீனியர் சிட்டிசனுக்கு 5.95% முதல் 6.30% வரை வட்டி வழங்கப்படுகிறது.
எதில் முதலீடு செய்யலாம்:
தபால் துறையில் 1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 5 வருடத்தில் 38,723 ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்த தொகையாக 1,38,723 ரூபாய் கிடைக்கும்.
அதுவே SBI வங்கியில் 1 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடத்தில் 31,083 ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்த தொகையாக 1,31,083 ரூபாய் கிடைக்கும்.
இரண்டிலும் ஒப்பிட்டு பார்க்கும் போது SBI வங்கியை விட தபால் துறையில் வருமானம் அதிகமாக கிடைக்கின்றது, அதனால் தபால் துறை மாத வருமானம் திட்டம் சிறந்தது.
FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |