வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போஸ்ட் ஆபிசில் மாதந்தோறும் 1200 ரூபாய் சேமித்தால் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு.?

Updated On: October 17, 2023 7:08 AM
Follow Us:
post office rd 1200 per month 5 years in tamil
---Advertisement---
Advertisement

post office rd 1200 per month 5 years in tamil

பணத்தை கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால் பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது. அதனை சரியான முதலீடு திட்டங்களில் சேமிப்பது முக்கியமானது. ஏனென்றால் அடுத்தது என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அதனால் நமது சம்பாத்தியத்தில் முடிந்தளவு சேமித்து வைக்க வேண்டும். நீங்கள் சேமித்து வைத்த பணமானது எதோ ஒரு வகையில் நமது குழந்தைகளுக்கு உதவும். அதனால் சேமிப்பு திட்டங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவில் நிறைய வகையான முதலீடு திட்டங்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிசில் இருக்க கூடிய Rd திட்டத்தை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். வாங்க இந்த திட்டத்தில் 1000 ரூபாய் சேமித்தால் வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:

வயது தகுதி:

18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்கலாம்.

எங்கு சேமிப்பது:

உங்களுடைய ஊரில் உள்ள போஸ்ட் ஆபீசிலேயே உங்களின் பெயரிலோ அல்லது உங்களுடைய வீட்டில் உள்ளவர்களின் பெயரிலோ இந்த கணக்கினை ஆரம்பித்து சேமிக்க தொடங்கலாம்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

தேவையான ஆவணம்:

  1. வாக்காளர் அட்டை
  2. ரேஷன் கார்டு
  3. ஆதார் கார்டு
  4. பான் கார்டு
  5. ஓட்டுநர் உரிமம்
  6. பாஸ்போர்ட் அளவு போட்டோ

டெபாசிட்  தொகை:

போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது என்ன வட்டி விகிதம் உள்ளதோ அந்த வட்டி விகிதம் 5 வருடத்திற்கு மற்றம் இல்லாமல் இருக்கும்.

அந்த வகையில் தற்போதைய வட்டி விகிதம் 7.5% அளிக்கப்படுகிறது.

டெபாசிட் காலம்:

தபால் துறையில் உள்ள இந்த சேமிப்பு திட்டத்தில் 3 மற்றும் 5 வருடம் டெபாசிட் காலங்கள் உள்ளது. அதேபோல் டெபாசிட் காலத்திற்கு ஏற்றவாறு வட்டி அளிக்கப்படும்.

SBI வங்கியில் மாதந்தோறும் 3000 ரூபாய் முதலீடு செய்தால் வட்டி 7.30% அப்போ 5 வருடத்தில் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு.?

5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:

டெபாசிட் காலம்  மாதாந்திர சேமிப்பு தொகை  மொத்த சேமிப்பு தொகை  மொத்த வட்டி தொகை  முதிர்வு கால அசல் தொகை
5 வருடம் 1200 ரூபாய் 72,000 ரூபாய் 13,191 ரூபாய்  85,191 ரூபாய்

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை