வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

Updated On: October 8, 2025 5:53 PM
Follow Us:
Post Office RD Investment in Tamil
---Advertisement---
Advertisement

Post Office RD Investment in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவரின் வாழ்க்கையிலும் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சில பேர் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டில் அல்லது வங்கி கணக்கில் போட்டு வைக்கிறேன் என்று சொல்வார்கள். நீங்கள் வீட்டில் சேமித்து வைக்கும் பணமானது தேவைப்படும் போது எடுத்து விடுவோம், அதே போல் வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு எந்த விதமான வட்டியும் வழங்கப்படுவதில்லை. நீங்கள் சேமிக்கும் பணமானது எதிர்காலத்தில் அந்த பணத்திலிருந்து வட்டி கிடைத்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலீட்டு திட்டங்களில் சேமிக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் சேமித்தால் 10 பெற லட்சம் பெறலாமா என்பதை பற்றி பார்ப்போம்.

Post Office RD Investment:

தகுதி: 

  • இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
  • 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பெற்றோர்கள் பெயர்களின் கணக்கை திறக்கலாம்.
  • அது போல இந்த கணக்கை தனியாகவோ, கூட்டாகவோ சேமிக்கலாம்.

டெபாசிட் தொகை: 

தபால் துறை rd திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

முதிர்வு காலம்: 

இந்த திட்டத்தில் முதிர்வு காலமாக 5 வருடம் கொடுக்கப்படுகிறது. மேலும் நீங்கள் விருப்பபட்டால் 3 வருடத்தில் இந்த கணக்கை முடித்து கொள்ளலாம். அது போல நீங்கள் கணக்கை 5 வருடத்திற்கு பிறகு நீட்டித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

வட்டி:

தபால் துறை RD திட்டத்தில் தற்போது 6.70% வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் கணக்கை திறக்க போது வட்டி எவ்வளவு வழங்கப்படுகிறதோ அதே தான் 5 வருடமும் வழங்கப்படும்.

கடன் வசதி:

இந்த திட்டத்தில் 1 வருடத்திற்கு டெபாசிட் செய்த பிறகு கடன் வழங்கும் வசதி உள்ளது.

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

  • நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடத்தில் 1,80,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள்.
  • இதற்கு 5 வருடத்தில் வட்டி தொகையாக 34,097 ரூபாய் கிடைக்கும்.
  • 5 வருடம் கழித்து இந்த கணக்கை நீங்கள் முடிக்கும் போது வட்டி மற்றும் முதலீட்டு தொகை என சேர்த்து 2,14,097 ரூபாய் கிடைக்கும்.

அதுவே நீங்கள் இன்னும் 5 வருடத்திற்க்கு கணக்கை நீட்டித்து கொண்டால் உங்களுக்கு மொத்த வருமானமாக 5,12,565 ரூபாய் கிடைக்கும்.

தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வது லாபமா..? நஷ்டமா..?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now