RD Investment Plan in Post Office Details
நாம் அனைவருக்கும் சேமிப்பு பற்றியும், சேமிப்பின் முக்கியத்தும் பற்றி அதிகமாக தெரிந்து இருக்கும். ஏனென்றால் பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக இருப்பதனால் இதனை நாம் அதிகமாக இல்லை என்றாலும் கூட குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்வதன் மூலம் நமக்கு தேவைப்படும் போது அது மிகவும் உதவியானதாக இருக்கும். அந்த வகையில் பலரும் போஸ்ட் ஆபீசில் உள்ள திட்டங்களில் தான் சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஏனென்றால் மற்றவையுடன் ஒப்பிடும் போது போஸ்ட் ஆபீஸ் அதிக வட்டி விகிதங்களை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டத்தில் தான் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு நபர் போஸ்ட் ஆபிசில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாயினை முதலீடு செய்வது லாபமா..? இல்லை நஷ்டமா..? என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
போஸ்ட் ஆபீஸ் RD Vs SBI வங்கி RD இரண்டில் எதில் முதலீடு செய்வது லாபம்..
Post Office RD 1 000 Per Month Investment Plan:
- RD திட்டம் என்பது நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகையினை மட்டும் மாதந்தோறும் செலுத்தும் ஒரு முறையாக இருக்கிறது. பின்பு குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு நிலையான தொகையினை அளிக்கிறது.
- இதில் சேமிப்பு தொகை குறைந்தப்பட்சம் 100 ரூபாய் முதல் அதிகப்பட்சம் வரம்பில் எதுவும் இல்லை.
- வட்டி விகிதம் என்பது 6.5% வரை அளிக்கப்படுகிறது. அதேபோல் இந்த வட்டி விகிதத்தில் அதிகமாக மாற்றம் வந்தாலும் கூட நீங்கள் சேமிக்கும் போது இருந்த வட்டி விகிதம் தான் நீடிக்கும்.
- தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தில் சேமிப்பிற்கான காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 3 வருடமும் அளிக்கப்படுகிறது.
- நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையினை மட்டும் நீங்கள் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.
இதுவே இத்திட்டத்திற்கான விதிமுறைகள் ஆகும்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- பான் கார்டு
- ஓட்டுநர் உரிமம்
- வாக்காளர் அட்டை
- பாஸ்ப்போர்ட்
- ரேஷன் கார்டு
FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா
RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் 5 வருடத்திற்கு செலுத்துவது லாபமா..?
நீங்கள் மாதம் 1000 ரூபாய் என தபால் துறையில் உள்ள சேமிப்பு திட்டத்தில் சேமித்து வந்தீர்கள் என்றால் 5 வருடத்தில் மொத்த சேமிப்பு தொகையாக 60,000 ரூபாய் சேமித்து இருப்பீர்கள்.
மேலும் 6.5% வட்டி விகிதத்தின் படி 5 வருடத்திற்கு வட்டி தொகையாக 10,989 ரூபாய் கிடைக்கும். ஆகவே முதிர்வு காலம் முடிந்த பிறகு 70,989 ரூபாய் அசல் தொகையாக கிடைக்கும்.
இவ்வாறு சேமிப்பது உங்களுக்கு லாபமா..? என்றால் கண்டிப்பாக லாபம் தான். ஏனென்றால் மாதம் 1000 ரூபாயினை நீங்கள் எந்த ஒரு திட்டத்திலும் சேமிக்காமல் அப்படியே வைத்து இருந்தீர்கள் என்றால் அதற்கு வட்டி என்பது கிடையாது.
அதுவே இவ்வாறு சேமிப்பதன் மூலம் உங்களுக்கு ஒரு நிலையான வட்டி தொகை கிடைக்கிறது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது உங்களுக்கு லாபம் தான்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |