தபால் துறை RD vs இந்தியன் வங்கி RD எதில் முதலீடு செய்தால் வட்டி அதிகமாக கிடைக்கும்..

post office rd vs indian bank rd which is better in tamil

Post Office RD vs Indian Bank RD Which is Better

பொதுவாக சம்பாதிக்கின்ற பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இதற்காக பல்வேறு வகையான திட்டங்களை தெரிந்து கொண்டு வருகின்றனர். திட்டங்களை பற்றி தெரிந்து கொள்கிறார்கள் ஆனால் எதில் முதலீடு செய்தால் லாபம் என்பதை ஆராய மாட்டிக்கிறார்கள். நீங்கள் RD திட்டத்தில் சேமிக்க நினைக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். தபால் துறை RD சேமிப்பு திட்டம், இந்தியன் வங்கி RD திட்டம் இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

தபால் துறை RD திட்டம்:

18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

தபால் துறை rd சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.

இதில் வட்டி தொகையாக 6.5% வழங்கப்படுகிறது. மேலு இதில் முதிர்வு காலமாக 5 வருடம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால் மேலும் 5 வருடத்திற்கு நீட்டித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

3 வருடத்தில் கணக்கை முடித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

தபால் துறையில் மாதந்தோறும் 2000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5 வருடத்தில் 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 21,983 ரூபாய் கிடைக்கும். வட்டி மற்றும் டெபாசிட் தொகை என சேர்த்து 1,41,983 ரூபாய் கிடைக்கும்.

தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வது லாபமா..? நஷ்டமா..?

இந்தியன் வங்கி RD திட்டம்:

இந்தியன் வங்கியில் RD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும், அதிகபட்சம் 1லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம்.

காலம்  General Citizen Senior Citizen
180 நாட்கள் 4.00% 4.50%
181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை 4.00% 4.50%
9 மாதங்கள் முதல் 364 நாட்கள் வரை 4.40% 4.90%
1 ஆண்டு 5.00% 5.50%
1 வருடம் 1 நாள் முதல் 1 வருடம் 364 நாட்கள் வரை 4.95% 5.45%
2 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் 364 நாட்கள் 5.10% 5.60%
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 5.25% 5.75%

 

இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து வட்டி தொகையானது மாறுபடும்.

இதில் நீங்கள் மாதந்தோறும் 2000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5 வருடத்தில் 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டி தொகையாக 17,400 ரூபாய் வழங்குகிறார்கள். வட்டி மற்றும் சேமிப்பு தொகையாக 1,37,400 ரூபாய் கிடைக்கும்.

மேல் கூறப்பட்டுள்ளதை வைத்து பார்க்கும் போது வங்கியை விட தபால் துறையில் தான் வட்டி அதிகமாக கிடைக்கின்றது. அதனால் தபால் துறை RD திட்டம் தான் சிறந்தது.

FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு