போஸ்ட் ஆபீஸ் RD Vs SBI வங்கி RD இரண்டில் எதில் முதலீடு செய்வது லாபம்..?

Post Office RD vs SBI RD Which is Better 

வணக்கம் நண்பர்களே..! நீங்கள் குறிப்பிட்ட பணத்தினை முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஏனென்றால் இன்று பணத்தினை முதலீடு செய்வதற்கு எது சிறந்தது என்று ஒப்பிட்டு பார்க்கக்கூடிய முதலீடு பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். நாம் அனைவரும் போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டம் பற்றி கேள்வி பட்டிருப்போம். அதே சமயம் அத்தகைய திட்டமானது வங்கியிலும் இருக்கும். இவ்வாறு ஒரே திட்டம் இரண்டு இடத்திலும் நமக்கு கிடைக்கும் போது எதில் முதலீடு செய்வது என்றும், அது நமக்கு ஏற்றதாக இருக்கும் என்ற குழப்பங்கள் ஏற்படும். அந்த வகையில் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள RD Vs SBI வங்கி RD இரண்டில் எது சிறந்த லாபத்தை அளிக்கும் என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ரெக்கரிங் டெபாசிட் 2023:

நம்மிடம்  உள்ள குறிப்பிட்ட தொகையினை மாதம் தோறும் டெபாசிட் செய்து குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு வட்டி மற்றும் அசல் என தொகையினை அளிக்கும் முறை ஆகும். இத்தகைய ரெக்கரிங் டெபாசிட் திட்டம்  ஒரு தொடர் வைப்புநிதி திட்டமாக அழைக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Recurring Deposit என்றும் அழைக்கப்படுகிறது.

Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா 

போஸ்ட் ஆபீஸ் RD Vs SBI வங்கி RD:

Post Office RD SBI Bank RD
post office rd sbi bank rd
தபால் துறையில் உள்ள RD குறைந்தபட்ச சேமிப்பு தொகை 100 ரூபாய் ஆகும். இதிலும் குறைதபட்ச தொகை 100 ரூபாய் ஆகும்.
அதிகபட்ச தொகை வரம்பில் இல்லை. SBI வங்கியிலும் அதிகப்பட்ச தொகை வரம்பில் இல்லை.
இதில் உங்களுக்கான வட்டி விகிதமாக 6.5% வரை அளிக்கப்படுகிறது. வட்டி விகிதம் என்பது நீங்கள் தேர்வு செய்யும் முதிர்வு காலத்தினை பொறுத்து தான் அமையும். ஆனாலும் வட்டி விகிதம் 6.50% முதல் 7.30% வரை அளிக்கப்படுகிறது.
RD திட்டத்தில் உங்களுக்கான முதிர்வு காலம் என்பது 5 வருடம் ஆகும். உங்களுக்கான முதிர்வு காலம் என்பது 1 வருடம் முதல் 10 வருடம் வரை ஆகும்.
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி கிடையாது. மூத்த குடிமக்களுக்கு என்று வட்டி விகிதம் கூடுதலாக அளிக்கப்படுகிறது.
சேமிப்பு தொகையில் 50% வரை கடனைப் பெறலாம். இதில் கடன் பெரும் வசதி கிடையாது.
இதனை போஸ்ட் ஆபீசில் தான் ஓபன் செய்ய வேண்டும். இந்த திட்டத்தினை SBI வங்கியில் தான் ஓபன் செய்ய வேண்டும்.

 

இரண்டில் எந்த திட்டம் சிறந்தது.?

போஸ்ட் ஆபிசில் திட்டத்தில் கடன் வழங்கும் வசதி இருந்தாலும் கூட மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வட்டி தொகை கிடையாது. அதுவே SBI வங்கியில் மூத்த குடிமக்களுக்கு என்று சிறப்பான வட்டி வழங்கப்படுகிறது.

மேலும் ஒரு நபர் போஸ்ட் ஆபீசில் உள்ள திட்டத்தில் 10,000 ரூபாய் 5 வருட கால அளவில் டெபாசிட் செய்தார் எனில் 5 வருடம் கழித்து தோராயமாக 6 லட்சம் வரை பெறலாம். ஆனால் இதே முறையில் ஒரு மூத்த குடிமக்கள் இன்னும் கூடுதலான தொகையினை பெறுவார்கள்.

ஆகவே இவை மட்டும் இல்லாமல் மற்ற அனைத்தினையும், தற்போது வழங்கும் வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது SBI வங்கியில் உள்ள RD திட்டம் சேமிப்பதற்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு