தபால் துறையில் 50,000 ரூபா முதலீடு செய்து 20,500 வட்டி பெற வேண்டுமா.?

Advertisement

Post Office Senior Citizen Savings Investment

பணத்தின் தேவை மற்றும் அருமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பணத்தை சம்பாதிப்பதற்கு தான் மனிதர்களின் வாழ்க்கை உள்ளது என்றே சொல்லலாம். அப்படி நீங்கள் உழைக்கும் பணத்தை சேமிப்பது முக்கியமல்லவா. அந்த வகையில் இளமை காலத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பதற்கான ஒரு அருமையான திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அது என்ன மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்று தானே யோசிக்கிறீர்கள், வாங்க இந்த தொகுப்பில் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற முழு தகவலையும் படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Senior Citizen Savings Scheme:

தகுதி:

இந்த சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

டெபாசிட் தொகை:

இந்த திட்டக்கல் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 15 லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம்.

வட்டி:

இந்த சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

டெபாசிட் காலம்:

இதில் டெபாசிட் காலமாக 5 வருடம் கொடுக்கபடுகிறது. நீங்கள் விருப்பபட்டால் 5 வருடத்திற்கு பிறகு நீட்டித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதற்கு இரண்டு ஆப்ஷன்கள் வழங்ப்படுகிறது.

3 லட்சம் முதலீடு செய்து 1,11,000 ரூபாய் வருமானம் பெற வேண்டுமா.!

Option- 1

1 வருடம் முடிந்த பிறகு நீங்கள் இந்த திட்டத்தை பாதியில் முடித்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகையில் இருந்து 1.5% தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள குறிப்பிட்ட தொகை தான் வழங்கப்படும்.

Option- 2

அதுவே 2 வருடம் முடிந்த பிறகு  போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த கணக்கை முடித்து கொண்டால் உங்களுடைய முதலீட்டு தொகையில் இருந்து 1% தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள குறிப்பிட்ட தொகை மட்டும் தான் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

  • வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
  • உங்கள் வாடிக்கையாளரை அறிய (KYC) படிவத்தை நிரப்பவும்
  • நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை
  • முகவரி ஆதாரம்
  • சமீபத்திய புகைப்படம்
  • வயது சான்று
  • ஆதார் அட்டை
  • ஓய்வூதிய பலன்கள் வழங்கல் தேதி

தபால் துறையில் இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடத்தில்  எவ்வளவு தொகை கிடைக்கும்:

நீங்கள் போஸ்ட் ஆபீஸில் Senior Citizen Savings திட்டத்திற்கு கீழ் 50,000ரூபாய்   முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

இந்த திட்டத்தில் நீங்கள் 50,000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டி தொகையாக 20,500 ரூபாய் கிடைக்கும்.

டெபாசிட் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மேச்ருட்டி தொகையாக 70,500 ரூபாய் கிடைக்கும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி தொகையாக 1,025 வழங்கப்படும்.

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,06,966 லட்சம் பெற வேண்டுமா.?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → முதலீடு

 

Advertisement