குறைந்த முதலீட்டில் வட்டியுடன் சேர்த்து 12 லட்சம் ரூபாயினை அளிக்கும் தபால் துறை முதலீடு திட்டங்கள்..!

Advertisement

Post Office Small Investment Schemes in Tamil

பொதுவாக நாம் எந்த செயலை செய்யும் முன்பாகவும் யோசித்து செய்கிறோம் இல்லையோ ஆனால் பணம் விஷயத்தில் மட்டும் ஒன்றுக்கும் மூன்று முறை யோசித்து தான் செயல்படுவோம். ஏனென்றால் பணம் என்பது நம்முடைய வாழ்க்கைக்கு இன்றையமையாததாக இருப்பதனால் நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. அந்த வகையில் பார்த்தால் பலரும் பணத்தினை எதில் முதலீடு செய்வது என்பது பற்றி தான் சிந்திக்கிறார்கள். அப்படி பார்த்தால் முதலீடு என்றவுடன் நாம் அனைவருக்கும் போஸ்ட் ஆபீஸ் தான் முதலில் நியாபகம் வரும். ஏனென்றால் மற்றவையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வட்டி விகிதம் அதிகமாகவும், பாதுகாப்பு மிக்க ஒன்றாகவும் இருக்கிறது. ஆகையால் இதில் தான் குழப்பங்கள் ஏற்படுகிறது. அதனால் இன்று போஸ்ட் ஆபீசில் குறைந்த முதலீட்டில் அதிக வட்டி மற்றும் அசல் தொகையினை அளிக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களை பற்றி பார்க்கப்போகிறோம்.

சீனியர் சிட்டிசன் திட்டத்தில் தபால் துறை Vs SBI பேங்க் இரண்டில் எது சிறந்தது 

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2023:

Monthly Income Scheme in Tamil:

post office monthly income scheme in tamil

போஸ்ட் ஆபீசில் உள்ள மாதாந்திர வருவாய் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 9,00,000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் உங்களிடம் இருக்கும் தொகையினை மாதந்தோறும் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டியாக 7.4% அளிக்கப்படுகிறது.

Selvamagal Semippu Thittam Post Office in Tamil:

பெண் குழந்தைகளுக்கு என்று உள்ள திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

இதில் வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் பணத்தினை செலுத்த வேண்டும். மேலும்  வட்டி விகிதமாக 7.6% வரை அளிக்கப்படுகிறது.

Fixed Deposit Post Office in Tamil:

post office fixed deposit scheme in tamil

போஸ்ட் ஆபீசில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கான முதிர்வு காலத்தினை பொறுத்து தான் வட்டி அமையும்.

மேலும் வட்டி விகிதமாக தோராயமாக 6.8% முதல் 7.5% வரை அளிக்கப்படுகிறது. மேலும் முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.

தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வது லாபமா..  நஷ்டமா.. 

Post Office PPF Scheme Interest Rate in Tamil:

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான குறைந்த பட்ச முதலீடு தொகை 500 ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகை என்றால் அது 1,50,000 ரூபாய் ஆகும்.

இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.10% வழங்கப்படுகிறது.

Post Office NSC Scheme in Tamil:

nsc post office scheme in tamil

NSC திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். மேலும் நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டியாக 7.70% அளிக்கப்படுகிறது.

அதேபோல் டெபாசிட் காலம் 5 வருடம் ஆகும்.

மேலே சொல்லப்பட்டுள்ள போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் அனைத்திற்கும் வட்டி விகிதம் என்பது அடிக்கடி மாறுபடலாம். ஆனால் இதில் முதலீடு செய்யும் போது எவ்வளவு வட்டி இருக்கிறதோ அதுவே முதிர்வு காலம் வரை தொடங்கும்.

தபால் துறை RD vs இந்தியன் வங்கி RD எதில் முதலீடு செய்தால் வட்டி அதிகமாக கிடைக்கும்..

எதில் அதிக முதலீட்டு தொகை கிடைக்கும்..?

வட்டி விகிதம் மற்றும் சேமிப்பு தொகை, முதிர்வு காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அசல் தொகை மாறுபடலாம். அதனால் ஒரு எடுத்துக்காட்டாக ஒரு திட்டத்தில் எவ்வளவு தொகை கிடைக்கிறது என்று கீழ் பார்க்கலாம்.

சேமிப்பு தொகை: 9,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 7.10%

மொத்த வட்டி தொகை: 3,19,500 ரூபாய்

அசல் தொகை: 12,19,500 ரூபாய் 

ஆகையால் உங்களுக்கு எது சிறந்தது என்று பார்த்து சேமியுங்கள்.

1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் ……

5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement