Post Office SSY Investment Details in Tamil
பணத்தின் மதிப்பு என்பது இன்றைய கால தலைமுறையினருக்கு அதிகமாகவே தெரிந்து இருக்கிறது. ஏனென்றால் இதனுடைய அத்தியாவசிய தேவை பற்றி அனைவருமே அறிந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இவற்றை எல்லாம் பற்றி அறிந்தும் பணத்தினை சேமிக்காமல் இருப்பவர்கள் இன்னமும் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண் குழந்தையை பெற்றவர்கள் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்டவர்களுக்கு என்று தபால் துறையில் உள்ள திட்டமே செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். எனவே இத்தகைய திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கு முன் அதில் உள்ள விதிமுறைகளை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். எனவே செல்வ மகள் சேமிப்பு திட்டம் மாதம் 5000 ரூபாய் போஸ்ட் ஆபீசில் செலுத்தினால் குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 5000:
வயது வரம்பு:
இந்த திட்டத்தில் சேர விரும்பும் பெண் குழந்தைகளுக்கான வயது வரம்பு ஆனது 10 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆகவே 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் சேர இயலாது.
சேமிப்பு தொகை:
தபால் துறையில் இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 250 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 1,50,000 ரூபாய் வரையிலும் சேமிக்கலாம்.
வட்டி விகிதம்%:
தற்போதய வட்டி விகிதமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8% அளிக்கப்படுகிறது.
சேமிப்பு காலம்:
சேமிப்பு காலமாக இதற்கு 21 வருடங்கள் இருந்தாலுமே முதல் 15 வருடம் மட்டுமே உங்களுக்கான சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும். ஆனால் மொத்த அசல் தொகையினை 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு தான் பெற முடியும்.
Sukanya Samriddhi Yojana 5000 Per Month Calculator:
மாத சேமிப்பு தொகை: 5,000 ரூபாய்
வட்டி விகிதம்: 8%
சேமிப்பு காலம்: 15 ஆண்டு
மொத்த சேமிப்பு தொகை: 9,00,000 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 18.92 ரூபாய்
அசல் தொகை: 27.92 ரூபாய்
போஸ்ட் ஆபீசில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் மொத்த வட்டி தொகை எவ்வளவு
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |