தபால் துறை டைம் டெபாசிட் திட்டம்
பணத்தை சம்பாதிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவுக்கு அதனை சேமிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில பேர் பாதுகாப்பானவற்றில் சேமிக்க வேண்டும் என்பதற்காக நிறுவனங்கள் மற்றும் தபால் துறையில் சேமிக்கின்றனர். சில பேர் எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக உள்ளவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் தான் இந்த பதிவில் தபால் துறையில் உள்ள டைம் டெபாசிட் திட்டத்தில் 2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று கொள்வோம்.
தபால் துறை டைம் டெபாசிட் திட்டம்:
இத்தகைய டைம் டெபாசிட் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம். மேலும் இத்தகைய திட்டமானது உங்களது ஊரில் உள்ள போஸ்ட் ஆபீஸில் கணக்கை திறந்து கொள்ளலாம்.
சேமிப்பு தொகை:
மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் போஸ்ட் ஆபீஸில் Account ஓபன் செய்யும் போது ஒரே ஒரு முறை தொகையினை செலுத்தினால் போதும்.
இதில் நீங்கள் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகமாக எவ்வளவு ரூபாய் வரையிலும் முதலீடு செய்து கொள்ளலாம். மேலும் இதில் முதலீடு தொகை உங்களது விருப்பமே.
சீனியர் சிட்டிசன் திட்டத்தில் தபால் துறை Vs SBI பேங்க் இரண்டில் எது சிறந்தது
வட்டி:
இத்தகைய திட்டத்தில் உங்களுக்கான வட்டி விகிதம் என்பது முதிர்வு காலத்தை பொறுத்தே அமையும். மேலும் இதனுடைய வட்டி விகிதமானது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆனால் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.
Post Office Time Deposit Interest Rate | |||
1 வருடம் | 2 வருடம் | 3 வருடம் | 5 வருடம் |
6.8% | 6.9% | 7.00% | 7.50% |
சேமிப்பு காலம்:
தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான சேமிப்பு காலம் என்பது 1,2,3 மற்றும் 5 என இவ்வாறு உள்ளது. எனவே உங்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல் தேர்வு செய்து கொள்ளலாம்.
எவ்வளவு கிடைக்கும்:
தபால் துறை டைம் டெபாசிட் திட்டத்தில் 2 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தை பொறுத்து கிடைக்கும் தொகை மாறுபடும், அதனை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விவரம் | 1 வருடம் | 2 வருடம் | 3வருடம் | 5 வருடம் |
வட்டி தொகை | 13,951 ரூபாய் | 29,325 ரூபாய் | 46,288 ரூபாய் | 82,956 ரூபாய் |
முதிர்வு தொகை | 2,13,951ரூபாய் | 2,29,325 ரூபாய் | 2,46,288 ரூபாய் | 2,82,956 ரூபாய் |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |