Post Office TD Vs SBI FD Which is Better
ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக நாம் அனைவருமே தினமும் அல்லது மாத சம்பளம் வாங்குபவராக தான் இருப்போம். அப்படி நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம் அல்லவா..! ஆனால் பணத்தை வீட்டில் சேமித்து வைப்பதால் எந்தவொரு பயனும் இல்லை. அதனாலேயே பலரும் போஸ்ட் ஆபிஸ் போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். சரி இன்று நாம் போஸ்ட் ஆபிஸ் TD மற்றும் SBI வங்கியின் FD இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என்று பார்க்கலாம் வாங்க..!
போஸ்ட் ஆபிஸ் FD Vs வங்கி FD இரண்டில் வட்டி எதில் அதிகம் தெரியுமா
போஸ்ட் ஆபிஸ் TD (Vs) SBI வங்கியின் FD..!
பொதுவாக நம் நாட்டில் எத்தனையோ முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் அனைவரும் தேடுவது போஸ்ட் ஆபிஸின் சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது வங்கியின் வாய்ப்பு நிதியை தான். இப்படி மக்கள் அனைவருமே இதுபோன்ற திட்டங்களில் தான் முதலீடு செய்ய முன் வருகிறார்கள்.
இந்த இரண்டுமே முதலீடு செய்ய சிறந்தது என்பதால் தான் மக்கள் இதை தேர்வு செய்கிறார்கள். ஆனால் இது இரண்டில் எது சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
SIP-யில் 5000 முதலீடு செய்து 6 கோடி பெறுங்கள்
ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து அதன் ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இதனால் வங்கிகளும் அதன் பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் வட்டி விகிதங்களும் அதிகரித்து வருகின்றன.
அதாவது வட்டி விகிதங்களின் அதிகரிப்பு எவ்வளவு என்றால் 5 சதவீதமாக இருந்த வட்டி விகிதமனது தற்போது 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இரண்டில் எது பெஸ்ட்..!
Post Office TD : போஸ்ட் ஆபிஸ் TD என்பது Time Deposit என்று சொல்லப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், வட்டி விகிதமும் அதிகளவில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எந்தவொரு சந்தை அபாயம் இல்லை. மேலும் அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமானது வங்கி வட்டி விகிதங்களை விட அதிகமாகவே இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் போஸ்ட் ஆபிஸில் 1 வருட டைம் டெபாசிட் திட்டத்திற்கு – 6.8% முதல் 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்திற்கு – 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது சிறந்தது
SBI Bank FD : SBI பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரையிலான முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன. இதற்கான வட்டி விகிதம் என்பது 3% முதல் 7.1% வரையில் வழங்கப்படுகின்றது. அதாவது 1 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.8% வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 2 வருடம் முதல் 3 வருடத்திற்கு – 7% வரை வட்டி வழங்கபடுகிறது.
இதனை வைத்து பார்க்கும் போது வங்கி FD -யை விட போஸ்ட் ஆபிஸ் TD -யில் வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது. அதனால் போஸ்ட் ஆபிஸ் TD -யில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதனால் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் போஸ்ட் ஆபிஸ் TD திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.10,000 முதலீட்டில் 3 கோடி அடைவது எப்படி?
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |