PPF VS VPF இரண்டில் எது அதிக வருமானம் தரும்..

Advertisement

PPF or VPF Which is Better in Tamil

பொதுவாக நம் பிள்ளைகள் ஏதவாது அடம் பிடித்தால் கூட அதனை சமாதானம் செய்யாமல் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அந்த பிள்ளை எப்படி இருக்கா என்று கூறி திட்டுவார்கள். மேலும் ஏதவாது உடை அல்லது நகைகள் அல்லது எந்த பொருள் வாங்கினாலும் சரி கலர் மற்றும் தரத்தை பார்த்து தான். அதிலும் கலர் மற்றும் நிறுவனம் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து தான் வாங்குவோம். சாதரண பொருட்களை கூட ஒப்பிட்டு பார்த்து தான் வாங்குகிறோம். நாம் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதிலும் எது சிறந்தது என்று பார்த்து தான் வாங்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு PPF or VPF இரண்டு திட்டத்தில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

PPF or VPF Which is Better in Tamil:

ஓய்வூதியம் திட்டம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு நிரந்தரமாக வருமானம் பெற வேண்டுமென்றால் ஓய்வூதியம் திட்டம் உதவி செய்கிறது.

பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா

PPF:

PPF in tamil

PPF திட்டம் 15 ஆண்டுகள் பதிவிக்காலத்துடன் வருகிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்ப பெறுவதற்கு அனுமதிக்கிறது. இந்த திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்ப்படுகிறது. PPF  கணக்கை வங்கி அல்லது தபால் துறையில் தான் திறக்க முடியும்.

VPF:

vpf in tamil

மாதாந்திர பங்களிப்பை பெற்றிருந்தாலும் ஊழியர்களின் விருப்ப அடிப்படையில் அதிக தொகையை நிதிக்காக வழங்கலாம். இந்த திட்டத்திற்கு 8.5% வட்டி வழங்ப்படுகிறது. VPF கணக்கை திறப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தாலே உங்களின் முதலாளியிடம் தெரிவித்தாலே போதும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையை முதலாளியிடம் தெரிவித்தால் அவர்கள் சம்பளத்திலிருந்து கழித்து விடுவார்கள்.

எதில் முதலீடு செய்வது சிறந்தது:

சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் VPF உதவுகிறது, சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு VPF திட்டத்தில் பயன் அடைய முடியாது. ஆனால் PPF திட்டத்தில் அனைவரும் பயன் அடைய முடியும். PPF திட்டத்தில் அளிக்கும் வட்டியை விட VPF திட்டத்தில் வட்டி அதிகமாக உள்ளது. அதனால்  PPF விட VPF திட்டமே சிறந்தது.

எதில் முதலீடு செய்கிறீர்களோ இல்லையோ இதில் கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க..

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement