PPF Vs EPF in Tamil
இன்றைய காலகட்டத்தில் இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே மிக மிக முக்கியமாக தேவைப்படும் ஒன்று என்றால் அது பணம் தான். எனவே அனைவருமே தங்களது வாழ்க்கைக்கு மிக முக்கியமாக தேவைப்படும் பணத்தை மிகவு கடினப்பட்டு சம்பாதிக்கிறார்கள். அப்படி கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் நிமிடம் ஒரு சில காலங்களுக்கு மட்டுமே தான் இருக்கும். அதன் பிறகு நாம் திரும்பவும் கடினமாக உழைக்க வேண்டும். அதனால் அனைவருக்குமே தங்களது தற்போதை வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கைகாக சேமிப்பு அல்லது முதலீடு செய்வது என்பதில் மிகுந்த ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. ஆனால் எதில் எப்படி முதலீடு செய்வது என்பதில் தான் மிகுந்த குழப்பங்கள் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் இரண்டு முதலீடு முறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
NPS Vs PPF இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும்
PPF Vs EPF முதலீடு செய்ய எது சிறந்தது..?
Employees’ Provident Fund (EPF) அல்லது PF அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்ட சேமிப்புத் திட்டமாகும்.
இந்த EPF-ன் வட்டிவிகிதமான ஒவ்வொரு ஆண்டுக்கும் EPFO மூலம் அறிவிக்கப்படும். மேலும் இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டமாகும்.
Public Provident Fund அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது முதியோருக்கு வருமான பாதுகாப்பினை வழங்குவதற்காக வரி இல்லாத முதிர்ச்சி தொகையை உருவாக்ககூடிய மத்திய அரசால் நிறுவப்பட்ட நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சேமிப்பு திட்டமாகும்.
PPF மற்றும் EPF ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை இங்கு காணலாம் வாங்க.
அம்சங்கள் | பொது வருங்கால வைப்பு நிதி (PPF) | ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) |
முதலீடு செய்வதற்கான தகுதியானவர்கள் |
எந்த ஒரு இந்திய மாணவர்கள், சுயதொழில் செய்பவர்கள், பணியாளர் அல்லது ஓய்வு பெற்ற நபர்களும் இதில் முதலீடு செய்யலாம். NRI-கள் முதலீடு செய்ய முடியாது |
EPF சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே முதலீடு செய்யலாம். |
முதலீட்டுத் தொகை | குறைந்தபட்சம் ரூ 500 மற்றும் அதிகபட்சம் ரூ 1,50,000 வரை முதலீடு செய்யலாம். | கட்டாயமாக சம்பளத்தில் 12 %, DA முதலீடு செய்யவேண்டும். மேலும் இதில் நீங்களே தானாக முன்வந்து இதனை அதிகரித்து கொள்ளலாம் |
பதவிக்காலம் | 15 ஆண்டுகள், அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு காலவரையின்றி நீட்டித்து கொள்ளலாம். | நிரந்தரமாக வேலையை விட்டு வெளியேறும்போது மூடப்படலாம். ஓய்வு பெறும் வரை நிறுவனங்களை மாற்றும்போது மாற்றலாம். |
வட்டி விகிதம் | 7.1% | 8.15% |
நிதிக்கு பங்களிப்பவர் | மைனர் விஷயத்தில் சுய அல்லது பெற்றோர் மட்டுமே | முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் மட்டுமே |
வரிச்சலுகை |
PPF-ல் செய்யப்படும் அனைத்து டெபாசிட்டுகளும் பிரிவு 80C யின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். அதேபோல் முதிர்வு காலத்தில் திரட்டப்பட்ட மொத்த தொகை மற்றும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. |
பங்களிப்புக்கு வரி விலக்கு உண்டு. முதிர்வுத் தொகைக்கு 5 ஆண்டுகள் நிறைவடைந்தால் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும். |
கடன் சலுகை | கணக்கு துவங்கிய மூன்றாவது மற்றும் ஆறாவது நிதியாண்டுகளில் நிபந்தனைகளுடன் கடன் கிடைக்கும். | கிடையாது |
வருமானம் | PPF-ல் வட்டிவிகிதங்கள் அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. | EPF-ல் வட்டிவிகிதங்கள் அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. |
மாதாந்திர வருமானத் திட்டம் Vs பிக்சட் டெபாசிட் இவ்விரண்டில் முதலீடு செய்ய எது ஏற்றது
RD Vs PPF இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது தெரியுமா
ஆர்.டி கணக்கு Vs சேமிப்பு கணக்கு இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |