PPF in Tamil
இன்றைய பதிவில் PPF Fund என்றால் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். இன்றைய நிலையில் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதை விட அதை ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. நாம் முதலீடு செய்யும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் பல முதலீட்டு திட்டங்கள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
PPF Full Form:
Public Provident Fund
ஆன்லைன் டிரேடிங் என்றால் என்ன? |
PPF என்றால் என்ன..?
PPF Fund என்பது தமிழில் பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிறது. இந்த PPF திட்டத்தை மத்திய அரசால் ஆதரிக்கப்படும் வரியில்லா சேமிப்பு திட்டம் என்று சொல்லலாம்.
நிரந்தர வேலை செய்பவர்களுக்கு எப்படி PF போன்ற திட்டங்கள் வழங்கப்படுகிறதோ அதேபோல தனிநபர்கள் பயன் பெறுவதற்காக இந்திய அரசு இந்த PPF திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்த PPF திட்டம் 1968 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது. இது இந்தியர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும், தனியார் பாதுகாப்பில் பணிபுரியும் மக்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குவதற்காகவும் தான் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த PPF திட்டமானது தற்போது சிறந்த வரிசேமிப்பு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்த PPF திட்டம் அதிக வட்டி கொடுக்க கூடிய ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டு கணக்கிலும் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு, பின் அது இந்திய அரசால் வட்டி தொகை நம் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள் => Trading Account மற்றும் Demat Account வேறுபாடுகள் என்ன?
இந்த திட்டத்தின் நன்மைகள்:
- இது அரசு ஆதரவு செய்யும் திட்டம் என்பதால் இதில் செய்யும் முதலீடு மற்றும் வட்டிக்கு கட்டாயம் பாதுகாப்பு இருக்கும்.
- இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 1.5 லட்சம் வரை ஒரு ஆண்டிற்கு வரிவிலக்கு உண்டு.
- இந்த PPF திட்டத்தில் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.
- இத்திட்டத்தில் வங்கி சேமிப்பில் கிடைக்கும் வட்டியை விட அதிகமான வட்டி இதில் கிடைக்கும்.
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்..?
- இதில் முதலீடு செய்வதற்கு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.
- இதில் 18 வயது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு Minor Account திறக்கலாம்.
- வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கு இந்த PPF Acount திறக்க முடியாது.
- இதில் முதலீடு செய்ய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் 18 வயதிற்கு குறைவானவர்களும் இத்திட்டத்தில் சேரலாம்.
Mutual Funds vs Stocks இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |