ரெகரிங் டெபாசிட் vs மியூச்சுவல் ஃபண்ட் இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

Advertisement

RD or Mutual Fund Which is Better 

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவினை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய காலத்தில் அனைத்திற்கும் மூலதனமாகவும், அத்தியாவசியமானதாகவும் பணம் காணப்படுகிறது. ஆகையால் பெரும்பாலோனர் பணத்தினை ஏதோ ஒரு திட்டங்களில் தான் முதலீடு செய்து வருகிறார்கள். இவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்றவுடன் அனைவருக்கும் ஏதோ ஒரு குழப்பம் வந்து விடுகிறது. அதாவது ஒரு திட்டத்துடன் மற்றொரு திட்டத்தினை மக்கள் அனைவரும் ஒப்பிட்டு பார்க்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அத்தகைய வரிசையின் படி இன்று RD or Mutual Fund என்ற இரண்டு முதலீடு திட்டங்களையும் ஒன்றுடன் ஒன்றினை ஒப்பிட்டு பார்த்து எது சிறந்தது என்று தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம்.

ரெக்கரிங் டெபாசிட் என்றால் என்ன.?

ரெக்கரிங் டெபாசிட்

ரெக்கரிங் டெபாசிட் திட்டம் என்பது நாம் மாதந்தோறும் நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகையினை தொடர்ச்சியாக செலுத்தி வரும் முறை ஆகும். மேலும் இந்த முதலீடு திட்டத்தில் நாம் குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு நிலையான ஒரு தொகையினை பெறலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்:

மியூச்சுவல் ஃபண்ட்

இத்தகைய முதலீடு திட்டத்தினை பொறுத்தவரை மொத்தமாக தான் முதலீடு செய்ய வேண்டும். மேலும் இதில் மாதம் மாதமும் பணத்தினை செலுத்த வேண்டும் என்ற வரைமுறை இல்லை. அதேபோல் இதிலும் நீங்கள் நீண்ட கால வருமானத்தை பெறலாம்.

பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா

RD or Mutual Fund இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு:

Recurring Deposit Mutual Fund
இதில் உங்களுடைய தொகையினை மாதந்தோறும் செலுத்த வேண்டும். உங்களுக்கான தொகையினை வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.
குறைந்தப்பட்ச தொகையாக இதில் 100 ரூபாயும் அதிகப்பட்ச தொகையாக இதில் 1,50,000 ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் வரம்பு என்று எதுவும் கிடையாது.
RD திட்டத்தில் பெரும்பாலும் ஏற்றம் இறக்கம் இருக்காது. இதில் ஏற்றம், இறக்கம் என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டு தான் காணப்படுகிறது.
இத்தகைய முதலீடு திட்டத்ற்கான முதிர்வு காலம் 6 மாதம் முதல் 10 வருடம் வரை ஆகும். மியூச்சுவல் ஃபண்ட்டில் குறுகிய, நீண்ட கால முதலீடு என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கி மற்றும் போஸ்ட் ஆபிஸினை பொறுத்து மாறுபடும். இதிலும் வட்டி விகிதம் என்பது மாறுபட்டு தான் காணப்படுகிறது.
இது முற்றிலும் பாதுகாப்பு நிறைந்த முதலீடு திட்டம் ஆகும். கொஞ்சம் ஆபத்துகள் நிறைந்த முதலீடு திட்டம்.

 

RD or Mutual Fund இரண்டில் எது சிறந்தது.?

முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் நிலையான வருமானத்தை ஆபத்துகள் எதுவும் இல்லாமல் பெற விரும்பினால் அதை RD திட்டம் சிறந்தது ஆகும். அதுவே ஆபத்துகள் நிறைந்து இருந்தாலும் சரி நீண்ட கால முதலீட்டை பெற விரும்பினால் அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஆகவே இரண்டில் எது உங்களுக்கு ஏற்றதாக உள்ளதோ அதிலேயே முதலீடு செய்து கொள்ளாலாம்.

Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement