RD Vs PPF in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே பொதுவாக நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது தான். அப்படி நமது வாழ்க்கை முழுவதும் எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் நமது பணத்தை சரியான முறையில் முதலீடு அல்லது சேமிக்க வேண்டும்.
அதனால் அனைவருமே ஏதாவது ஒருமுறையில் சேமிக்கவோ முதலீடு செய்யவோ தயாராகிவிட்டார்கள். ஆனால் எதில் முதலீடு செய்தால் நமக்கு சரியான பலன் திரும்ப கிடைக்கும் என்பதில் தான் இன்று பலருக்கும் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு முதலீட்டு முறையை பற்றி விவரங்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று ஆர்.டி கணக்கு Vs PPF இவை இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.
ஆர்.டி கணக்கு Vs சேமிப்பு கணக்கு இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது
ஆர்.டி கணக்கு Vs PPF எது சிறந்தது..?
தொடர்ச்சியான வைப்பு கணக்கு அல்லது ஆர்.டி கணக்கு என்பது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் NBFC-கள் தொடர்ச்சியான வைப்புகளை நிதி தயாரிப்புகளாக வழங்குகின்றன. அதாவது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFC)-களில் நாம் மாதாந்திர அடிப்படையில் டெபாசிட் செய்வது.
இறுதியில் நீங்கள் டெபாசிட் செய்த மொத்த தொகைக்கான வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையை அளிப்பதாகும்.
Public Provident Fund (PPF) என்பது முதியோர் வருமான பாதுகாப்பை வழங்குவதற்காக வரி இல்லாத முதிர்ச்சி தொகையை உருவாக்ககூடிய
மத்திய அரசால் நிறுவப்பட்ட நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.
இவை இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் வாயிலாக காணலாம் வாங்க.
பிக்சட் டெபாசிட் Vs திரவ நிதி இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது தெரியுமா
அம்சங்கள் | ஆர்.டி கணக்கு | Public Provident Fund (PPF) |
குறிக்கோள் | வழக்கமான சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் | முதலீட்டின் மீதான உத்தரவாதமான வருமானத்துடன் டெபாசிட்களுக்கு வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ் வரி தள்ளுபடியைப் பெற |
முதலீடு செய்யக்கூடிய தொகை | தவணைகளில் – பொதுவாக மாதாந்திர தவணைகள் முதலீடு செய்யக்கூடிய தொகைக்கான வரம்பு இல்லை |
சிறிய மற்றும் சமமற்ற யூனிட்கள் அல்லது மொத்த தொகையில் முதலீடுகள் பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யலாம் ஆண்டுக்கு ரூ.150,000 |
வட்டி விகிதங்கள் | வங்கிக்கு வங்கி மாறுபடும்- காலத்தைப் பொறுத்து அதாவது காலாண்டு ஒரு முறை மாற்றப்படும். |
நிலையானது- தற்போது 8.1%
ஆண்டுதோறும் மாற்றப்படும். |
பதவிக்காலம் | 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை | 15 ஆண்டுகள், மேலும் 5 ஆண்டுகளின் மடங்குகளில் நீட்டிக்கப்படலாம் |
முதிர்ச்சி தொகை வரி | வரி விதிக்கக்கூடியது | வரி இலவசம் |
முன்கூட்டியே திரும்பப் பெறுதல் | முழுத் தொகையும், எந்த நேரத்திலும் ஆனால் ஒரு குறிப்பிட்ட அபராதத்தை வசூலித்த பிறகு, வங்கிகள் பொதுவாக 1% அபராதமாக வசூலிக்கின்றன. பகுதியளவு திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படாது |
கணக்கு தொடங்கியதில் இருந்து 7வது நிதியாண்டு முதல் திரும்பப் பெறலாம் மற்றும் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு பகுதி மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். |
கடன் | RD இல் வைப்புத்தொகை மதிப்பில் 90% வரை கடன் வசதி கிடைக்கிறது, அங்கு RD பிணையமாக உறுதியளிக்கப்பட வேண்டும் மற்றும் அத்தகைய கடனுக்கான வட்டி விகிதம் நிலையான வைப்பு விகிதத்தை விட சுமார் 0.5% முதல் 2% அதிகமாக உள்ளது. |
மூன்றாம் ஆண்டு முதல் கடன் கிடைக்கும் |
ஆபத்து | PPF உடன் ஒப்பிடும்போது ஆபத்தானது | பாதுகாப்பான முதலீடு |
கால வருமானம் | இல்லை | இல்லை |
பொதுவாக முதலீடு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால் எதில் முதலீடு செய்கின்றோம் என்பதும் மிகவும் முக்கியம் அதனால் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்னால் நீங்கள் எதில் முதலீடு செய்ய இருக்கின்றிர்களோ அதனை பற்றி முழுவிவரங்களையும் அறிந்து கொண்ட பிறகு முதலீடு செய்யுங்கள்.
Term Deposit Vs Fixed Deposit முதலீடு செய்ய எது பெஸ்ட் தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |