RD Vs Savings Account in Tamil
வணக்கம் நண்பர்களே..! மனிதனாக அனைவருமே பணத்தை சேமிப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் நாம் நமக்காக சேமித்தால் மட்டுமே நமது எதிர்காலம் எந்தவித பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். ஆனால் சேமிப்பால் மட்டும் பணம்அதிகரிக்காது. முதலீடு செய்தால் தான் பணம் அதிகரிக்கும். அதனால் உங்களின் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது எந்த முதலீடு முறையில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக அளவு பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் முதலீடு செய்ய வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு முதலீடு முறையை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல் இன்று ஆர்.டி கணக்கு Vs சேமிப்பு கணக்கு இவை இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.
பிக்சட் டெபாசிட் Vs திரவ நிதி இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது தெரியுமா
ஆர்.டி கணக்கு Vs சேமிப்பு கணக்கு எது சிறந்தது..?
தொடர்ச்சியான வைப்பு கணக்கு அல்லது ஆர்.டி கணக்கு என்பது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் NBFC -கள் தொடர்ச்சியான வைப்புகளை நிதி தயாரிப்புகளாக வழங்குகின்றன. அதாவது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFC)-களில் நாம் மாதாந்திர அடிப்படையில் டெபாசிட் செய்வது.
இறுதியில் நீங்கள் டெபாசிட் செய்த மொத்த தொகைக்கான வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையை அளிப்பதாகும்.
சேமிப்பு கணக்கு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பிற நிதி நிறுவனங்களிலும் திறக்கப்படும் வைப்பு கணக்குகள் ஆகும். ஆரம்ப கால வைப்பு கணக்குகளுக்கு மிதமான வட்டி விகிதத்தை வழங்குகிறது. சேமிப்புக் கணக்கு மிகவும் திரவ முதலீடு ஆகும். ஏனெனில் அதை உடனடியாக திரும்பப் பெறலாம். சேமிப்புக் கணக்கு என்பது உத்தரவாதமான வட்டியுடன் கூடிய ஆபத்து இல்லாத முதலீடாகும்.
Term Deposit Vs Fixed Deposit முதலீடு செய்ய எது பெஸ்ட் தெரியுமா
அம்சங்கள் | சேமிப்பு கணக்கு | ஆர்.டி கணக்கு |
வட்டி விகிதம் | வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படவில்லை. இது சந்தைக்கு ஏற்ப மாறுபடும். | வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 5.25% முதல் 7.90% வரை மாறுபடும். |
வைப்பு தொகை | வைப்புத் தொகைக்கு வரம்பு இல்லை | ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் டெபாசிட் செய்யப்படுகிறது |
பதவிக்காலம் | பதவிக்காலம் இல்லை | தவணை காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது |
திரும்பப் பெறுவதற்கான வரம்பு | திரும்பப் பெறும் வரம்பு இல்லை | முதிர்ச்சியடைந்தவுடன் திரும்பப் பெறுதல் |
வரி சலுகை | சேமிப்புக் கணக்கிற்கு நீங்கள் எந்த வரிச் சலுகையையும் பெற முடியாது | 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வட்டிக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படாது |
கடன் பெறுதல் | கிடைக்காது | கிடைக்காது |
அனைவருக்கும் சேமிப்புக் கணக்கு தேவை. ஏனெனில் இது அவர்களின் முதல் முதலீட்டு நடவடிக்கையாகும்.அதேபோல் ஒரு வங்கி RD உங்கள் நிதி நோக்கங்களை அடைய மற்றும் செல்வத்தை உருவாக்க உதவுகிறது.
பொதுவாக அனைவருமே ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் நாம் எதில் முதலீடு செய்யப்போகின்றோம் என்பதை பற்றி முதலில் நன்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதன் பிறகே முதலீடு செய்ய வேண்டும்.
பிக்சட் டெபாசிட் Vs சேமிப்பு கணக்கு இதில் முதலீடு செய்ய எது சிறந்தது
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |